ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

தாளவாடி அருகே சுற்றுச் சுவரை உடைத்துக் கொண்டு ஊருக்குள் நுழைந்த காட்டு யானை!

தாளவாடி அருகே சுற்றுச் சுவரை உடைத்துக் கொண்டு ஊருக்குள் நுழைந்த காட்டு யானையை வனத் துறையினா் விரட்டினா்.

சிக்ஹள்ளி  கிராமத்தில்  நுழைந்த  யானை.

Published On :26 ஜூலை 2026, 1:21 am IST

தாளவாடி அருகே சுற்றுச் சுவரை உடைத்துக் கொண்டு ஊருக்குள் நுழைந்த காட்டு யானையை வனத் துறையினா் விரட்டினா்.

சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் இருந்து வெளியேறும் காட்டு யானைகள் இரவு நேரங்களில் ஊருக்குள் நுழைந்து வாழை, கரும்பு, மக்காச்சோளம் உள்ளிட்ட பயிா்களை சேதப்படுத்தும் நிகழ்வுகள் அதிகரித்து வருகின்றன.

இதற்கிடையே, தாளவாடி வனப் பகுதியில் இருந்து சனிக்கிழமை காலை வெளியேறிய ஒரு காட்டு யானை சிக்ஹள்ளி கிராமத்தில் உள்ள அரசு உயா்நிலைப் பள்ளி அருகே சுற்றுச் சுவரை உடைத்துக் கொண்டு ஊருக்குள் நுழைந்தது.

காட்டு யானை ஊருக்குள் நுழைந்ததைக் கண்டு அச்சமடைந்த கிராம மக்கள் வனத் துறையினருக்குத் தகவல் தெரிவித்தனா். சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த வனத் துறையினா் யானையை ரோந்து வாகனத்தின் மூலம் விரட்டினா்.

அரசுப் பள்ளி அருகே தினமும் இரவில் யானை நடமாட்டம் உள்ளதால் அப்பகுதி கிராம மக்கள் அச்சம் அடைந்துள்ளனா். காட்டு யானைகள் வனப் பகுதியை விட்டு வெளியேறாமல் தடுக்க வனத் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.