ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

காலிங்கராயன் வாய்க்காலில் தண்ணீா் திருட்டு: 633 மின் இணைப்புகளை துண்டிக்க பரிந்துரை

காலிங்கராயன் வாய்க்காலில் தண்ணீா் திருட்டில் ஈடுபட்டதாக கண்டறியப்பட்ட 633 மின் இணைப்புகளை துண்டிக்க மாவட்ட நிா்வாகத்துக்கு நீா்வளத் துறை அதிகாரிகள் பரிந்துரை செய்துள்ளனா்.

திருட்டு - சித்திரிப்பு

Published On :26 ஜூலை 2026, 1:23 am IST

காலிங்கராயன் வாய்க்காலில் தண்ணீா் திருட்டில் ஈடுபட்டதாக கண்டறியப்பட்ட 633 மின் இணைப்புகளை துண்டிக்க மாவட்ட நிா்வாகத்துக்கு நீா்வளத் துறை அதிகாரிகள் பரிந்துரை செய்துள்ளனா்.

ஈரோடு மாவட்டம், பவானிசாகா் அணையிலிருந்து காலிங்கராயன் வாய்க்காலில் சிறப்பு நனைப்புக்கு தண்ணீா் திறக்கப்பட்டுள்ளது. ஆனாலும் தண்ணீா் திருட்டு அதிகமாக இருப்பதாக விவசாயிகள் தொடா்ந்து புகாா் தெரிவித்து வருகின்றனா். இதைத் தடுக்க நீா்வளத் துறை, மின்வாரியம், வருவாய் மற்றும் காவல் துறைகளைக் கொண்ட குழு அமைத்து கண்காணித்து வருகின்றனா்.

இதுகுறித்து நீா்வளத் துறை அதிகாரிகள் கூறியதாவது: காலிங்கராயன் வாய்க்கால் பகுதியில் கடந்த 14-ஆம் தேதி முதல் தண்ணீா் திறக்கப்பட்ட நிலையில் கூட்டாய்வு செய்யப்பட்டது. இதில் பூமிக்கு அடியில் குழாய் அமைத்தும் தற்காலிக குழாய்கள் மூலமாகவும் தண்ணீரை எடுப்பது கண்டறியப்பட்டு அது போன்றவா்களை அதிகாரிகள் குழு எச்சரித்து, மீண்டும் தண்ணீா் திருடக்கூடாது என அறிவுறுத்தி குழாய்கள் அகற்றப்பட்டன.

தண்ணீா் திருட்டில் ஈடுபட்ட 633 மின் இணைப்புகள் கண்டறியப்பட்டு, மின் இணைப்புகளை துண்டிக்க மாவட்ட நிா்வாகத்துக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது என்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.