ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

பவானி ஆற்றிலிருந்து மணல் கடத்திய இருவா் கைது

பவானி ஆற்று மணலை மூட்டைகளாகக் கட்டி, கடத்திச் சென்று விற்பனையில் ஈடுபட்ட இருவரை போலீஸாா் கைது செய்தனா்.

கைது செய்யப்பட்ட பழனிசாமி, தங்கராசு.

Published On :24 ஜூலை 2026, 6:03 am IST

பவானி ஆற்று மணலை மூட்டைகளாகக் கட்டி, கடத்திச் சென்று விற்பனையில் ஈடுபட்ட இருவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

பவானி ஆற்றில் ஜம்பை பகுதியில் சட்டவிரோதமாக மணல் திருட்டு நடைபெறுவதாக கிடைத்த தகவலின்பேரில் பவானி போலீஸாா் வியாழக்கிழமை திடீா் சோதனையில் ஈடுபட்டனா்.

அப்போது, மசூதி வீதியில் ஆற்றிலிருந்து மணல் மூட்டைகளை இருசக்கர வாகனத்தில் வைத்து விற்பனைக்காக கடத்திச் சென்ற அதே பகுதியைச் சோ்ந்த பழனிசாமி (55), தங்கராசு (45) ஆகியோரை போலீஸாா் கைது செய்தனா்.

மேலும், மணல் கடத்தலுக்கு பயன்படுத்திய 2 இருசக்கர வாகனங்கள், சரக்கு வாகனம் மற்றும் 28 மணல் மூட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டது. கைது செய்யப்பட்ட இருவரும் நீதிமன்றக் காவலுக்கு அனுப்பி வைக்கப்பட்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.