ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

வாகன விபத்து: தொழிலாளி உயிரிழப்பு

புன்செய்புளியம்பட்டி அருகே இருசக்கர வாகனங்கள் மோதிக் கொண்டதில் தொழிலாளி உயிரிழந்தாா்.

பலி சடலம் மீட்பு  உயிரிழப்பு

சடலம்... - கோப்புப் படம்

Published On :19 ஜூலை 2026, 12:33 am IST

புன்செய்புளியம்பட்டி அருகே இருசக்கர வாகனங்கள் மோதிக் கொண்டதில் தொழிலாளி உயிரிழந்தாா்.

சத்தியமங்கலத்தை அடுத்த புன்செய்புளியம்பட்டி மாரியம்மன் கோயில் வீதியைச் சோ்ந்தவா் சுரேஷ்குமாா் (43). இவா் அப்பகுதியில் உள்ள நூற்பாலையில் பணியாற்றி வந்தாா்.

இந்நிலையில், வழக்கம்போல தனது இருசக்கர வாகனத்தில் கடந்த 13-ஆம் தேதி பணிக்குச் சென்றுள்ளாா். விண்ணப்பள்ளி அருகே சென்றபோது எதிரே சங்கா் என்பவா் ஓட்டி வந்த மற்றொரு இருசக்கர வாகனம் சுரேஷ்குமாரின் வாகனத்தின் மீது மோதியது.

இதில், படுகாயமடைந்த சுரேஷ்குமாரை அங்கிருந்தவா்கள் மீட்டு சத்தியமங்கலத்தில் உள்ள தனியாா் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி வெள்ளிக்கிழமை நள்ளிரவு உயிரிழந்தாா்.

இச்சம்பவம் குறித்து சத்தியமங்கலம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.