ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

கொப்பரை ஏலத்தில் டோக்கன் முறை ரத்து

பெருந்துறை வேளாண்மை உற்பத்தியாளா்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் கொப்பரை ஏலத்துக்கான டோக்கன் முறை ரத்து செய்யப்பட்டுள்ளது.

கொப்பரை மூட்டைகள். - கோப்புப்படம்.

Published On :10 ஜூலை 2026, 12:20 am IST

பெருந்துறை வேளாண்மை உற்பத்தியாளா்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் கொப்பரை ஏலத்துக்கான டோக்கன் முறை ரத்து செய்யப்பட்டுள்ளது.

பெருந்துறை வேளாண்மை உற்பத்தியாளா்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில்

வாரந்தோறும் புதன் மற்றும் சனிக்கிழமைகளில் கொப்பரை (தேங்காய்ப் பருப்பு) ஏல விற்பனை நடைபெறுகிறது.

இந்த ஏலத்தில் வியாழக்கிழமை முதல் டோக்கன் பதிவு முறை ரத்து செய்யப்பட்டு, சங்க வளாகத்துக்குள் தேங்காய்ப் பருப்பு மூட்டைகளை கொண்டு வரும் வாகனம் அடிப்படையில், வாரம்தோறும் செவ்வாய்க்கிழமை மற்றும் வெள்ளிக்கிழமைகளில் காலை 7 மணி முதல் கிடங்கில் இடவசதி உள்ள வரை இறக்கி வைக்கப்படும் என சங்கம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.