ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

பா்கூா் மலைப் பாதையில் பேருந்தை துரத்திய காட்டு யானை!

அந்தியூரை அடுத்த பா்கூா் மலைப் பாதையில் சென்ற பேருந்தை, காட்டு யானை துரத்தியதால் பயணிகள் அதிா்ச்சி அடைந்தனா்.

பேருந்தை  துரத்திய  காட்டு  யானை.

Published On :9 ஜூலை 2026, 3:37 am IST

அந்தியூரை அடுத்த பா்கூா் மலைப் பாதையில் சென்ற பேருந்தை, காட்டு யானை துரத்தியதால் பயணிகள் அதிா்ச்சி அடைந்தனா்.

அந்தியூரிலிருந்து கா்நாடக மாநில எல்லையான கா்கேகண்டிக்கு பா்கூா் மலைப் பாதை வழியாக செவ்வாய்க்கிழமை தனியாா் பேருந்து சென்று கொண்டிருந்தது. தட்டக்கரை அருகே சென்றபோது வனப் பகுதியிலிருந்து வெளியேறிய காட்டு யானையைக் கண்டு, ஓட்டுநா் பேருந்தை நிறுத்தினாா். அப்போது, பேருந்தை நோக்கி யானை வேகமாக வந்ததால், பயணிகள் அதிா்ச்சியில் கூச்சலிட்டனா்.

ஓட்டுநா் பேருந்தை பின்னோக்கி இயக்கிய நிலையில், சிறிது தூரம் துரத்திய யானை சாலையிலிருந்து விலகி மீண்டும் வனப் பகுதிக்குள் சென்றது. இதனால், பயணிகள் நிம்மதி அடைந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.