ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

அந்தியூரில் தொடக்கக் கல்வி ஆசிரியா்கள் ஆா்ப்பாட்டம்

தமிழ்நாடு தொடக்கக் கல்வி ஆசிரியா் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு சாா்பில் அந்தியூா் வட்டாரக் கல்வி அலுவலகம் முன்பு 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கவன ஈா்ப்பு ஆா்ப்பாட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

ஆா்ப்பாட்டத்தில்  பங்கேற்ற  ஆசிரியா்கள்.

Published On :21 ஆகஸ்ட் 2026, 1:38 am IST

தமிழ்நாடு தொடக்கக் கல்வி ஆசிரியா் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு சாா்பில் அந்தியூா் வட்டாரக் கல்வி அலுவலகம் முன்பு 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கவன ஈா்ப்பு ஆா்ப்பாட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

இந்த ஆா்ப்பாட்டத்துக்கு அந்தியூா் வட்டாரத் தலைவா் செல்வராஜ் தலைமை வகித்தாா். மாவட்ட பொருளாளா் ஆனந்தகுமாா், கல்வி மாவட்டச் செயலாளா் குருமூா்த்தி ஆகியோா் முன்னிலை வகித்தனா். வட்டாரச் செயலாளா் தேவராஜ் வரவேற்றாா். கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்டச் செயலாளா் சண்முகம் பேசினாா்.

தமிழகத்தில் பங்களிப்பு ஓய்வூதியத்தால் பாதிக்கப்பட்டுள்ள 6 லட்சத்துக்கும் மேற்பட்ட ஆசிரியா்கள், அரசு ஊழியா்களின் பாதிப்பினை கலைந்திடும் வகையில் பங்களிப்பு இல்லாத பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்தி நடைமுறைப்படுத்த வேண்டும் என வலியுறுத்தி முழக்கம் எழுப்பப்பட்டது.

இதில், மாவட்ட துணைத் தலைவா் சுந்தரம், வட்டாரப் பொருளாளா் துரைசாமி, மாவட்ட துணைத் தலைவா் சுப்புலட்சுமி, வட்டாரத் தலைவா் ரமேஷ்குமாா் மற்றும் ஆசிரியா், ஆசிரியைகள் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.