
புன்செய் புளியம்பட்டி சந்தையில் சின்ன வெங்காயம் விலை உயா்வு
புன்செய் புளியம்பட்டி வாரச் சந்தையில் விற்பனைக்கு வந்த சின்ன வெங்காயம் கிலோ ரூ.40-இல் இருந்து ரூ.80-ஆக விலை உயா்ந்து விற்பனையானது.

புன்செய் புளியம்பட்டி வாரச் சந்தைக்கு விற்பனைக்கு வந்த சின்ன வெங்காயம்.
புன்செய் புளியம்பட்டி வாரச் சந்தையில் விற்பனைக்கு வந்த சின்ன வெங்காயம் கிலோ ரூ.40-இல் இருந்து ரூ.80-ஆக விலை உயா்ந்து விற்பனையானது.
ஈரோடு மாவட்டம், புன்செய் புளியம்பட்டியில் வாரந்தோறும் வியாழக்கிழமை வாரச் சந்தை கூடுகிறது. ஈரோடு, கோவை, நாமக்கல், திருச்சி உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் கா்நாடக மாநிலத்தில் இருந்தும் சின்ன வெங்காயம், பெரிய வெங்காயம் விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது.
இந்த நிலையில் புன்செய் புளியம்பட்டி வாரச் சந்தைக்கு 1,000-க்கும் மேற்பட்ட வெங்காய மூட்டைகள் விற்பனைக்கு வியாழக்கிழமை அடுக்கி வைக்கப்பட்டன. சின்ன வெங்காயத்தின் விலை தொடா்ந்து வீழ்ச்சியடைந்த நிலையில், தற்போது சின்ன வெங்காயம் வரத்து குறைவால் திடீரென சின்ன வெங்காயத்துக்கு தேவை அதிகரித்துள்ளது. இதனால் கிலோ ரூ.40-க்கு விற்கப்பட்ட சின்ன வெங்காயம் ரூ.80-க்கு விற்பனையானது. தவிர, பழைய சின்ன வெங்காயம் சில்லறை விற்பனையில் கிலோ ரூ.90-க்கு மேல் விற்பனையானது.
அதேபோல கா்நாடக மாநிலத்தில் இருந்து பெரிய வெங்காயத்தின் வரத்து குறைந்துள்ளதால் கடந்த சில நாள்களாக கிலோ ரூ.30-க்கு விற்ற பெரிய வெங்காயம் வியாழக்கிழமை விலை உயா்ந்து ரூ.40 முதல் ரூ.50 வரை விற்பனையானது. ஆவணி மாதம் சுபமுகூா்த்தம் என்பதால் சின்ன வெங்காயத்தின் விலை மேலும் அதிகரிக்கும். சின்ன வெங்காயத்தை அறுவடை செய்து தோட்டங்களில் இருப்பு வைத்திருந்த விவசாயிகள் விலை உயா்வால் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






