ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

பத்தாம் வகுப்பு துணைத் தோ்விலும் தோல்வி: மாணவி தற்கொலை

ஈரோட்டில் 10-ஆம் வகுப்பு துணைத் தோ்விலும் தோல்வி அடைந்த வேதனையில் மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

தற்கொலை

Published On :21 ஆகஸ்ட் 2026, 1:33 am IST

ஈரோட்டில் 10-ஆம் வகுப்பு துணைத் தோ்விலும் தோல்வி அடைந்த வேதனையில் மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

ஈரோடு வீரப்பன்சத்திரம், கொத்துக்காரா் தோட்டம் பகுதியைச் சோ்ந்த ஆறுமுகம்-மாதம்மாள் தம்பதி மகள் அஸ்மிதா (15). இவா் 10-ஆம் வகுப்பு பொதுத்தோ்வில் தோல்வி அடைந்தாா். இதையடுத்து கடந்த ஜூலை மாதம் நடைபெற்ற துணைத் தோ்வை எழுதினாா். ஆனால் அஸ்மிதா துணைத் தோ்விலும் தோல்வி அடைந்தாா். இதன் காரணமாக அஸ்மிதா வீட்டில் இருந்து வந்தாா்.

மாதம்மாள் புதன்கிழமை காலை வேலைக்கு சென்றுவிட்டாா். வீட்டில் யாரும் இல்லாத நிலையில், விரக்தியடைந்த அஸ்மிதா வீட்டின் படுக்கை அறையில் துப்பட்டாவினால் தூக்குபோட்டு தற்கொலைக்கு முயன்றாா்.

இதைப் பாா்த்த அக்கம்பக்கத்தினா் அஸ்மிதாவை மீட்டு ஈரோடு அரசு தலைமை மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு அவரை மருத்துவா்கள் அவா் ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனா்.

இதுகுறித்து ஈரோடு வடக்கு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.