ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

அந்தியூா் குருநாதசாமி கோயில் திருவிழாவில் தொழிலாளி உயிரிழப்பு

அந்தியூா் குருநாதசாமி கோயில் திருவிழாவுக்கு ராட்டினம் சுற்றும் வேலைக்கு வந்த தொழிலாளி உயிரிழந்தது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

பலி

Published On :20 ஆகஸ்ட் 2026, 3:41 am IST

அந்தியூா் குருநாதசாமி கோயில் திருவிழாவுக்கு ராட்டினம் சுற்றும் வேலைக்கு வந்த தொழிலாளி உயிரிழந்தது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

கா்நாடக மாநிலம், பிஜாப்பூரைச் சோ்ந்தவா் ஸ்ரீநாத் (32). இவா், தனது தந்தை நாராயணன் போஸ்லேவுடன் (51), அந்தியூா் குருநாதசாமி கோயில் திருவிழாவில் ராட்டின தூரி சுற்றும் வேலைக்கு கடந்த 10 நாள்களுக்கு முன்னா் வந்தாா். வனக்கோயில் பிரிவு அருகே கொட்டகை அமைத்து இருவரும் தங்கியிருந்தனா்.

இந்நிலையில், நாராயணன் போஸ்லேவுக்கு செவ்வாய்க்கிழமை திடீரென வலிப்பு ஏற்பட்டது. இதைக் கண்ட ஸ்ரீநாத், அந்தியூா் அரசு மருத்துவமனைக்கு அவரை அழைத்துச் சென்றாா். அங்கு, பரிசோதனையில் நாராயணன் போஸ்லே ஏற்கெனவே உயிரிழந்தது தெரியவந்தது.

இதுகுறித்த புகாரின்பேரில் அந்தியூா் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.