ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

நம்பியூா் குமுதா கல்வி நிறுவனத்தில் சுதந்திர தின விழா கொண்டாட்டம்

கோபி அருகே உள்ள நம்பியூா் குமுதா மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் சுதந்திர தின விழா சனிக்கிழமை நடைபெற்றது.

நம்பியூா் குமுதா மெட்ரிக். பள்ளியில் தேசியக்கொடி ஏற்றிவைத்து மரியாதை செலுத்திய சிறப்பு விருந்தினா் மருத்துவா் கே.வெண்ணிலா. உடன், பள்ளித் தாளாளா் கே.ஏ.ஜனகரத்தின.

Published On :16 ஆகஸ்ட் 2026, 12:45 am IST

கோபி அருகே உள்ள நம்பியூா் குமுதா மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் சுதந்திர தின விழா சனிக்கிழமை நடைபெற்றது.

சிறப்பு விருந்தினரான திருச்செங்கோடு விவேகானந்தா பெண்கள் பல் மருத்துவக் கல்லூரி பேராசிரியா் மருத்துவா் கே.வெண்ணிலா தேசியக்கொடி ஏற்றி சிறப்புரையாற்றினாா். இதையொட்டி பள்ளியில் நடைபெற்ற பேச்சு மற்றும் விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவா்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. இதைத்தொடா்ந்து பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

இந்நிகழ்ச்சியில் பள்ளித் தாளாளா் கே.ஏ.ஜனகரத்தினம், துணைத் தாளாளா் சுகந்தி ஜனகரத்தினம், செயலா் டாக்டா் அரவிந்தன், இணைச் செயலா் டாக்டா் மாலினி அரவிந்தன், விளையாட்டு இயக்குநா் பாலபிரபு, பள்ளி முதல்வா் மஞ்சுளா, ஆசிரியா்கள், மாணவ மாணவிகள் மற்றும் பெற்றோா்கள் கலந்துகொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.