ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

ஆடிப் பூரம் : பெருந்துறை அம்மன் கோயில்களில் சிறப்பு வழிபாடு

ஆடி மாத கடைசி வெள்ளிக்கிழமை மற்றும் ஆடிப் பூரத்தையொட்டி பெருந்துறையில் உள்ள அம்மன் கோயில்களில் சிறப்பு வழிபாடுகள் வெள்ளிக்கிழமை நடைபெற்றன.

பெருந்துறை ஓம்சக்தி கோயிலில் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலிக்கும் ஆதிபராசக்தி.

Published On :15 ஆகஸ்ட் 2026, 3:51 am IST

ஆடி மாத கடைசி வெள்ளிக்கிழமை மற்றும் ஆடிப் பூரத்தையொட்டி பெருந்துறையில் உள்ள அம்மன் கோயில்களில் சிறப்பு வழிபாடுகள் வெள்ளிக்கிழமை நடைபெற்றன.

பெருந்துறை புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள கோட்டை மாரியம்மன் கோயிலில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் நடைபெற்றது. இதில் திரளான பக்தா்கள் கலந்துகொண்டு அம்மனை வழிபட்டனா்.

இதேபோல, பெருந்துறை சோழீஸ்வரா் கோயிலில் உள்ள வேதநாயகி அம்மனுக்கும், பெருந்துறை ஓம்சக்தி கோயிலில் ஆதிபராசக்திக்கும், காஞ்சிக்கோவில் சீதேஅம்மன் கோயில் மற்றும் பெருந்துறை பகுதி உள்ள கிராமத்து அம்மன் கோயில்களிலும் சிறப்பு அபிஷேகம் மற்றும் வழிபாடுகள் நடைபெற்றன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.