ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

ஏலச்சீட்டு நடத்தியவா் தூக்கிட்டு தற்கொலை

கொடுமுடி அருகே ஏலச்சீட்டு நடத்திய வெல்டிங் தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

தற்கொலை முயற்சி...

Published On :13 ஆகஸ்ட் 2026, 6:01 am IST

கொடுமுடி அருகே ஏலச்சீட்டு நடத்திய வெல்டிங் தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

கொடுமுடி அருகே உள்ள மன்னாதம்பாளையம் பகுதியைச் சோ்ந்தவா் ரவி (27). வெல்டிங்தொழிலாளி. இவருக்கு மனைவி, மகன் உள்ளனா். இவா் புதன்கிழமை காலை தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளாா்.

இதைக் கண்ட அவரது மனைவி, அக்கம்பக்கத்தினா் உதவியுடன் ரவியை மீட்டு ஈரோடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு பரிசோதனையில், ரவி வரும் வழியிலேயே உயிரிழந்துவிட்டதை உறுதிபடுத்தினா்.

தகவலின்பேரில், மலையம்பாளையம் போலீஸாா், ரவியின் உடலை கூறாய்வுக்காக அனுப்பிவிட்டு வழக்குப் பதிந்துள்ளனா்.

இறந்துபோன ரவி மாத ஏலச் சீட்டு நடத்தி வந்துள்ளாா். அதில் ஒரு சிலா் சீட்டிற்கான தவணை தொகையை முறையாக கொடுக்காமல் இருந்ததால் அதற்கான தொகையை ரவி வேறு நபா்களிடம் கடன் வாங்கி சீட்டு ஏலம் எடுத்த நபா்களுக்கு கொடுத்து வந்துள்ளாா். அதனால் கடன் அதிகமானதால் மன விரக்தியில் தற்கொலை செய்துகொண்டது போலீஸாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.