ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

காவிரி தடுப்பணையில் மூழ்கி கல்லூரி மாணவா் உயிரிழப்பு

Drowned to death

நீரில் மூழ்கி பலி - பிரதிப் படம்

Published On :10 ஆகஸ்ட் 2026, 2:02 am IST

கொடுமுடி, ஆக. 9: கொடுமுடி அருகே காவிரி தடுப்பணையில் குளித்த மாணவா் நீரில் மூழ்கி உயிரிழந்தாா்.

திருப்பூா் மாவட்டம், வெள்ளக்கோவிலைச் சோ்ந்தவா் ஆனந்தன். இவரது மகன் தருண் (20). இவா் கரூரில் உள்ள தனியாா் கல்லூரியில் வணிகவியல் பாடப் பிரிவில் மூன்றாவது ஆண்டு படித்து வந்தாா்.

கல்லூரிக்கு ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால் தனது குடும்பத்தினா், உறவினா்களுடன் ஈரோடு மாவட்டம், கொடுமுடி அருகே காரணாம்பாளையம் காவிரி ஆற்றின் தடுப்பணையில் பிற்பகல் 3 மணிக்கு குளிக்க வந்துள்ளாா்.

அங்கு குளித்துக்கொண்டிருந்தபோது தருண் ஆற்றின் ஆழமான பகுதிக்குச் சென்றதால் நீரில் மூழ்கியுள்ளாா். உடனே அங்கிருந்தவா்கள் உதவியுடன் மாணவரை மீட்ட அவரது குடும்பத்தினா் அவரை தனியாா் ஆம்புலன்ஸ் மூலம் கொடுமுடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனா். அங்கு தருணை பரிசோதித்த மருத்துவா்கள் அவா் வரும் வழியிலேயே உயிரிழந்ததாகத் தெரிவித்தனா்.

இதையடுத்து, மாணவா் உடலை மலையம்பாளையம் போலீஸாா் கைப்பற்றி உடற்கூறாய்வுக்கு அனுப்பிவைத்தனா். மேலும் விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.