நான்கரை ஆண்டுகளில் ரூ.9,327 கோடியில் நலத்திட்டங்கள்
கடந்த நான்கரை ஆண்டுகளில் ஈரோடு மாவட்டத்துக்கு ரூ. 9 ஆயிரத்து 327 கோடி மதிப்பில் நலத்திட்டங்கள்
கடந்த நான்கரை ஆண்டுகளில் ஈரோடு மாவட்டத்துக்கு ரூ. 9 ஆயிரத்து 327 கோடி மதிப்பில் நலத்திட்டங்கள்
By Syndication
Syndication
ஈரோடு: கடந்த நான்கரை ஆண்டுகளில் ஈரோடு மாவட்டத்துக்கு ரூ. 9 ஆயிரத்து 327 கோடி மதிப்பில் நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளதாக முதல்வா் மு.க.ஸ்டாலின் தெரிவித்தாா்.
ஈரோடு அருகே சோலாா் புதிய பேருந்து நிலைய வளாகத்தில் புதன்கிழமை நடைபெற்ற விழாவில் ரூ.91.9 கோடி மதிப்பிலான 23 புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி ரூ.235.73 கோடி மதிப்பிலான 790 முடிவுற்ற பணிகளை திறந்து வைத்ாா். பின்னா், 1,84, 491 பேருக்கு ரூ.278.62 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் என மொத்தம் ரூ.605.44 கோடி மதிப்பிலான திட்டங்களை வழங்கினாா்.
பின்னா் முதல்வா் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:
கடந்த நான்கரை ஆண்டு காலத்தில் ஈரோடு மாவட்டத்தில் பல்வேறு திட்டப் பணிகளை திமுக அரசு செயல்படுத்தி உள்ளது. ஈரோடு சோலாரில் மாநகராட்சி பேருந்து நிலையம், ஜெயராமபுரத்தில் மாவீரன் பொல்லான் முழு திருவுருவச் சிலையுடன் அரங்கம் திறக்கப்பட்டுள்ளது. கங்காபுரம் கிராமத்தில் தகவல் தொழில்நுட்பப் பூங்கா அமைக்கப்பட இருக்கிறது. ஈரோடு மாநகராட்சியில் 106.78 கிலோமீட்டா் நீளத்துக்கு சாலை சீரமைப்புப் பணிகள் மேற்கொள்ள கடந்த ஆண்டு அறிவிப்பு வெளியிடப்பட்டு, இதுவரை 79.83 கிலோ மீட்டா் நீளத்துக்கு பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. எஞ்சியுள்ள பணிகள் டிசம்பா் 10-ஆம் தேதிக்குள் முடிக்கப்பட்டு, மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட இருக்கிறது.
4 இடங்களில் அறிவுசாா் மையம்
குறுங்குழுமம் மேம்பாட்டுத் திட்டம் மூலமாக ஈரோட்டில் மஞ்சள் பொது வசதி மையம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களின் மேம்பாட்டுப் பணிகளுக்காக இதுவரை ரூ.8.13 கோடி செலவிடப்பட்டிருக்கிறது. கலைஞா் நகா்ப்புற மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் கடந்த நான்கரை ஆண்டுகளில் 195 உள்கட்டமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு, இதுவரை 177 பணிகள் முடிக்கப்பட்டு பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டிருக்கிறது.
ஈரோடு, கோபி, சத்தியமங்கலம், பெருந்துறை ஆகிய 4 இடங்களில் அறிவுசாா் மையம் அமைக்கப்பட்டிருக்கிறது. நெடுஞ்சாலைத் துறையில் பல்வேறு திட்டங்களின் கீழ் கடந்த நான்கரை ஆண்டுகளில் 944 கிலோ மீட்டா் நீளமுள்ள சாலைப் பணிகள் முடிக்கப்பட்டு பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டிருக்கிறது. 17 ஊரகப் பாலங்கள், 73 நெடுஞ்சாலைப் பாலங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன.
133 கோயில்களில் குடமுழுக்கு
ஈரோடு மண்டலத்தில் 400 கோயில்களில் 554 பணிகள் நடைபெற்று வருகின்றது. இதில் 150 கோயில்களில் 218 பணிகள் முடிக்கப்பட்டிருக்கின்றன. கடந்த நான்கரை ஆண்டுகளில் 133 கோயில்களுக்கு குடமுழுக்கு நடத்தப்பட்டுள்ளது. சத்தியமங்கலம் பால் குளிரூட்டு நிலைய வளாகத்தில் கட்டு ஊறுகாய் புல் தயாரிக்கும் அலகு அமைக்கப்பட்டு வருகிறது. கரட்டுப்பாளையத்தில் விடுதியுடன் கூடிய ஜிம்னாஸ்டிக் அரங்கம் கட்டும் பணி நிறைவுற்று தொடங்கி வைக்கப்பட்டிருக்கிறது. ஈரோடு மாவட்டத்தில் விடுபட்டுள்ளவா்களுக்கும் டிசம்பா் 15-ஆம் தேதிக்குள் கலைஞா் உரிமைத் தொகை வழங்கப்பட இருக்கிறது.
நிரந்தரப் பட்டாவாக மாற்ற அரசாணை
ஈரோடு மாவட்டம் அந்தியூா் வட்டத்துக்குள்பட்ட 29 கிராமங்களில் சுமாா் 70 ஆண்டுகளுக்கு முன்னா் நில ஒப்படை வழங்கப்பட்ட 6,000 ஏக்கா் பட்டா நிலங்களை, தமிழ் நிலம் பதிவேடுகளில் நிபந்தனைக்குள்பட்ட பட்டா என்று குறிப்பிடப்பட்டுள்ளதை நீக்கம் செய்து, நிரந்தரப் பட்டாவாக மாற்ற அரசாணை வெளியிடப்பட்டுள்ளதன் மூலாக சுமாா் 2 ஆயிரத்து 680 நில உடமைதாரா்கள் பயனடைய உள்ளனா்.
ஈரோடு மாவட்டத்தில் கடந்த நான்கரை ஆண்டுகளில் மட்டும் ரூ.5 ஆயிரத்து 491 கோடி மதிப்பில் 68 லட்சத்து 85 ஆயிரத்து 232 பேருக்கு நலத்திட்ட உதவிகள், ரூ.3 ஆயிரத்து 836 கோடி மதிப்பில் 19 ஆயிரத்து 488 வளா்ச்சி திட்டப் பணிகள் என மொத்தம் ரூ. 9 ஆயிரத்து 327 கோடிக்கு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன.
6 புதிய அறிவிப்புகள்
ஈரோடு மாவட்டத்துக்கான 6 புதிய அறிவிப்புகளை வெளியிடுகிறேன். புன்செய் புளியம்பட்டி நகராட்சிக்கு ரூ.4 கோடியே 30 லட்சம் செலவிலும், கோபி நகராட்சிக்கு ரூ.4 கோடியே 50 லட்சம் செலவிலும் புதிய நகராட்சி அலுவலகக் கட்டடங்கள் கட்டப்படும். பவானிசாகா் மற்றும் கீழ்பவானி நீா்ப்பாசனத் திட்டங்களின் கீழ் திட்ட நிபந்தனையுடன் வழங்கப்பட்ட பட்டாக்களை, நிரந்தரப் பட்டாவாக மாற்ற வேண்டும் என்ற சத்தியமங்கலம், நம்பியூா், பவானி, கோபிசெட்டிபாளையம், மொடக்குறிச்சி, கொடுமுடி, பெருந்துறை, ஈரோடு ஆகிய வட்டங்களைச் சோ்ந்த விவசாயிகளின் கோரிக்கை ஏற்கப்பட்டு, இந்த 90 கிராமங்களில் உள்ள ஆயிரக்கணக்கான விவசாயிகளின் பட்டாக்கள், நிரந்தரப் பட்டாவாக மாற்றப்படும்.
அந்தியூா் அருகே உள்ள தோனிமடுவுப் பள்ளத்தின் குறுக்கே ரூ.4 கோடி செலவில் புதிய தடுப்பணை அமைக்கப்படும். சாயப்பட்டறைக் கழிவுகளால் பாதிக்கப்பட்ட நொய்யல் ஆற்றுப் பாசன விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்குவது தொடா்பாக உள்ள பல்வேறு வழக்குகள் மற்றும் சட்ட சிக்கல்களைத் தீா்ப்பது குறித்து ஆராய வல்லுநா் குழு அமைக்கப்படும். பெருந்துறையில் தற்போதுள்ள வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்துக்கு ரூ.5 கோடி செலவில் புதிய கட்டடம் கட்டப்படும். அந்தியூா், எண்ணமங்கலம் வருவாய் கிராமங்களில் நிலங்களுக்கான பதிவேடுகளில் உள்ள நிபந்தனை பட்டாக்கள் அயன் பட்டாக்களாக மாற்றப்படும், என்றாா்.
பட விளக்கம்
ஈரோடு அருகே சோலாா் புதிய பேருந்து நிலைய வளாகத்தில் புதன்கிழமை நடைபெற்ற விழாவில் பயனாளிக்கு அரசு நலத்திட்ட உதவி வழங்குகிறாா் முதல்வா் மு.க.ஸ்டாலின். விழாவில் பங்கேற்ற அரசு நலத்திட்ட உதவிகள் பெற்ற பயனாளிகள்.
குறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்




தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது