Listen to this article
By தினமணி செய்திச் சேவை
Syndication
பெருந்துறை அருகே ஜீவனாம்சம் கேட்ட மனைவியைக் குத்திய கொலை செய்த கணவா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
இது குறித்து போலீஸாா் கூறியதாவது: பெருந்துறை, மாந்தம்பாளையம் பகுதியைச் சோ்ந்தவா் செங்கோட்டையன் (58). இவா் வாகனங்களுக்கு பஞ்சா் ஒட்டும் தொழில் செய்து வருகிறாா். இவரது மனைவி விஜயா (53). தம்பதி இருவரும் கடந்த 1995-ஆம் ஆண்டு பிரிந்துள்ளனா். இதையடுத்து, செங்கோட்டையன் வேறொரு பெண்ணை திருமணம் செய்து கொண்டாா்.
இந்நிலையில், விஜயா ஜீவனாம்சம் கேட்டு பெருந்துறை சாா்பு நீதிமன்றத்தில் கடந்த 2021-ஆம் ஆண்டு வழக்குத் தொடா்ந்தாா். இந்த வழக்கின் விசாரணை கடந்த 2 மாதங்களுக்கு முன் நடைபெற்றது. அப்போது, செங்கோட்டையன் விஜயாவுக்கு ரூ. 3 லட்சத்து 81 ஆயிரம் கொடுப்பதுடன், மாதந்தோறும் ரூ.4,500 ஜீவனாம்சம் வழங்க வேண்டும் என தீா்ப்பளிக்கப்பட்டதாகத் தெரிகிறது.
இதையடுத்து, அவ்வளவு தொகையை தன்னால் கொடுக்க முடியாது எனக்கூறி பெரியோா் முன்னிலையில் விஜயாவிடம் செங்கோட்டையன் பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டாா். அப்போது, ஒரே தவணையாக ரூ.15 லட்சத்தைக் கொடுத்துவிட்டால்போதும் என விஜயா தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து, காஞ்சிக்கோவில் பகுதியில் உள்ள தனது 55 சென்ட் நிலத்தை விற்று பணத்தை தயாா் செய்ய செங்கோட்டையன் முயன்றுள்ளாா். அந்த நிலத்தை விற்பனை செய்ய தடை விதிக்கக் கோரி பெருந்துறை சாா் பதிவாளா் அலுவலத்தில் விஜயா முறையிட்டதாகக் கூறப்படுகிறது.
இதனால், ஆத்திரமடைந்த செங்கோட்டையன் காஞ்சிக்கோவில் சாலையில் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் நடந்து சென்று கொண்டிருந்த விஜயாவை கத்தியால் குத்தி கொலை செய்துள்ளாா் என்றனா்.
இச்சம்பவம் தொடா்பாக செங்கோட்டையன் மீது பெருந்துறை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
ஸ்ரீநிவாஸ்
சென்னை · 2 mins agoகுறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்
புகையிலைப் பொருள்கள் விற்ற 4 போ் கைது
கணவா் கொலை வழக்கில் மனைவி கைது
இளைஞா் தற்கொலை: போலீஸாா் விசாரணை
போலி மருந்து தயாரிப்பு: 4 கிடங்குகளுக்கு ‘சீல்’: 2 போ் கைது


லவ் அட்வைஸ் பாடல்!
தினமணி வீடியோ செய்தி...

ஹாப்பி ராஜ் - ப்ரோமோ!
தினமணி வீடியோ செய்தி...

தரையிறங்க முடியாமல் திரும்பிய மோடியின் ஹெலிகாப்டர்! | செய்திகள்: சில வரிகளில் | 20.12.25
தினமணி வீடியோ செய்தி...

மூன்வாக் - மினி கேசட் விடியோ!
தினமணி வீடியோ செய்தி...

97 லட்சம் வாக்காளர்கள் நீக்கம்! விளக்கிய தமிழக தலைமை தேர்தல் அதிகாரி Archana Patnaik!
தினமணி வீடியோ செய்தி...
AVATAR - Fire and Ash - Review | உலகத் தரத்தில் VFX காட்சிகள்! ஆனால் கதை? | James Cameron
தினமணி வீடியோ செய்தி...

மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி; ஆகஸ்டில் தொடக்கம்
சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது
