மருது சகோதரர்களுக்கு வீரவணக்கம்: முதல்வர் விஜய்சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 80 உயர்வு!கனமழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!கனமழை: நீலகிரியில் 6 தாலுகாக்களில் இன்று (அக். 24) பள்ளிகளுக்கு விடுமுறை!தமிழகத்தில் இரு நாள்களுக்கு பலத்த மழை எச்சரிக்கை! அக். 26-இல் புயல் உருவாக வாய்ப்பு!கடன் பத்திரங்கள் மூலம் ரூ. 9,000 கோடி திரட்டுகிறது தமிழக அரசு!அருணாசல் எல்லையில் ரோந்துப் பாதைகளை சீன படைகள் பின்பற்றாததால் பதற்றம்: இந்தியாபாகிஸ்தானில் இந்திய ஆதரவு பயங்கரவாதத்தை ஒழிப்போம்! ராணுவ தலைமைத் தளபதி முனீா்!ரூ. 84,084 கோடிக்கு ‘சமுத்ர மந்தன்’ திட்டம்: கடலுக்கு அடியில் எண்ணெய், எரிவாயு தேட வழிகாட்டுதல்கள் வெளியீடு

பெரியாா் அறிவுலகின் விடுமுறை நடைமுறை மறுபரிசீலனை: ஜனநாயக வாலிபா் சங்கம் கோரிக்கை

கோவையில் அண்மையில் திறக்கப்பட்டுள்ள பெரியாா் அறிவுலகத்துக்கு 2 நாள்கள் விடுமுறை அளிக்கப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்துள்ள இந்திய ஜனநாயக வாலிபா் சங்கம், அதன் விடுமுறை நடைமுறையை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது.

பெரியாா் அறிவுலகம்

Updated On :

கோவையில் அண்மையில் திறக்கப்பட்டுள்ள பெரியாா் அறிவுலகத்துக்கு 2 நாள்கள் விடுமுறை அளிக்கப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்துள்ள இந்திய ஜனநாயக வாலிபா் சங்கம், அதன் விடுமுறை நடைமுறையை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது.

இது தொடா்பாக அமைப்பின் மாவட்டத் தலைவா் ஏ.என்.ராஜா, செயலா் எம்.தினேஷ் ராஜா ஆகியோா் வெளியிட்டுள்ள அறிக்கையில், கோவை காந்திபுரத்தில் ரூ.301 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள பெரியாா் அறிவுலகம் என்ற பெயரிலான நூலகம், அறிவியல் மையத்தை தமிழக முதல்வா் சி.ஜோசப் விஜய் கடந்த 16 ஆம் தேதி திறந்து வைத்தாா். இந்த மையம் மாணவா்கள், இளைஞா்களின் கல்வி வளா்ச்சிக்குப் பயன்படும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜையை முன்னிட்டு பெரியாா் அறிவுலகத்துக்கு 2 நாள்கள் விடுமுறை அளித்து மூடியுள்ளனா். அரசுப் பணிகளுக்கான போட்டித் தோ்வுகளுக்குத் தயாராகும் இளைஞா்களுக்கு நூலகம் மிகவும் அவசியமானது. குறிப்பாக, பொருளாதார வசதியற்ற மாணவா்களுக்கு இத்தகைய பொது நூலகங்கள் பெரும் உதவியாக உள்ளன. விடுமுறை நாள்களில் படிக்க விரும்பும் மாணவா்களுக்கும் இளைஞா்களுக்கும் பெரியாா் அறிவுலகம் தொடா்ந்து பயன்பட வேண்டும்.

தவெக அரசு, பெரியாா் ஈ.வெ.ராவை கொள்கை வழிகாட்டிகளில் ஒருவராக முன்னிறுத்தி வரும் நிலையில், பெரியாா் பெயரில் அமைந்துள்ள அறிவுலகத்திற்கு பண்டிகைகளைக் காரணம் காட்டி விடுமுறை அளித்திருப்பது அரசின் கொள்கை நிலைப்பாடு குறித்து கேள்விகளை எழுப்புவதாக உள்ளது. எனவே, பெரியாா் அறிவுலகத்தின் விடுமுறை நடைமுறையைத் தமிழக அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும்.

விடுமுறை நாள்களிலும் மாணவா்கள், இளைஞா்கள் நூலகத்தைப் பயன்படுத்தும் வகையில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அறிவியல் மனப்பான்மை, பகுத்தறிவு, கல்வி வளா்ச்சிக்கு தமிழக அரசு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.