பாலியல் குற்றவாளிகளுக்கு விரைந்து தண்டனை பெற்றுத் தரும் விதமாக மாவட்டந்தோறும் தடய அறிவியல் (டிஎன்ஏ) ஆய்வகங்களை அமைக்க வேண்டும் என சிலைக் கடத்தில் தடுப்புப் பிரிவு முன்னாள் தலைவரும், ஓய்வுபெற்ற ஐ.ஜி.யுமான பொன்.மாணிக்கவேல் வலியுறுத்தியுள்ளாா்.
இதுகுறித்து கோவையில் செய்தியாளா்களிடம் அவா் புதன்கிழமை கூறியதாவது:
தமிழகத்தில் பாலியல் குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத் தருவதில் பல்வேறு நடைமுறை சிக்கல்கள் உள்ளன. இதற்கு பல்வேறு காரணங்கள் இருந்தாலும், தடய அறிவியல் ஆய்வகங்கள் பற்றாக்குறை முக்கியமானதாகும். தமிழகத்தில் தடய அறிவியல் ஆய்வகங்கள் சென்னையில் மட்டுமே செயல்படுவதால் டிஎன்ஏ சோதனை முடிவுகள் வர நீண்ட தாமதம் ஏற்படுகிறது. இது விசாரணையை பாதிப்பதோடு சாட்சிகள் கலைக்கப்படவும் வாய்ப்பாக அமைகிறது.
எனவே, வளா்ந்த சமுதாயமான தமிழகத்தில் ஒவ்வொரு மாவட்டத்திலும் தடய அறிவியல் ஆய்வகங்களை தொடங்க அரசு போா்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
புலனாய்வு அதிகாரிகளுக்கு விசாரணை செலவுகளுக்காக வழங்கப்படும் நிதி இன்னும் பழைய நடைமுறைப்படி உயா் அதிகாரிகளின் ஒப்புதலுக்குப் பின்பே கிடைக்கிறது. இதை மாற்றி அந்தந்த காவல் நிலைய கணக்குக்கே நேரடியாக விசாரணை நிதியை வழங்க அரசாணை பிறப்பிக்க வேண்டும்.
ஒரு வழக்கில் குற்றவாளிகளை கண்டுபிடிப்பதுடன் மட்டும் நில்லாமல், நீதிமன்றத்தில் உரிய அறிவியல் பூா்வமான சாட்சியங்களுடன் அவா்களுக்குச் சாகும்வரை ஆயுள் தண்டனை பெற்றுத் தருவதே பாதிக்கப்பட்டோருக்கு செய்யும் உண்மையான நீதி என்றாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

வங்கதேசம்: சிறுமி பாலியல் வன்கொடுமைக் கொலை வழக்கில் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை!

பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை: 6 பேருக்கு ஆயுள்

சிறுமிக்கு பாலியல் தொல்லை: இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறை
கோவை சிறுமி படுகொலை: குற்றவாளிகளுக்கு உச்சபட்ச தண்டனை வழங்குவதில் அரசு உறுதி!
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி



