நாங்கள் தோற்கவில்லை; முதல்வர் பதவியிலிருந்து விலக மாட்டேன்! மமதாஇந்தியா கூட்டணியை வலுப்படுத்துவேன் : மமதா பானர்ஜிவிஜய் எதிர்த்துப் போராடிய பரந்தூர் விமான நிலைய திட்டம் என்னவாகும்? விஜய் பதவியேற்பு எப்போது? ஸ்டாலின் பதவியேற்ற அதே மே 7ஆம் தேதியா?ஆட்சி மாற்றம்! தூசு தட்டப்படும் அமைச்சர் அறைகள்! இன்று மாலை கொளத்தூர் செல்கிறார் மு.க. ஸ்டாலின்!நாளை ஆளுநரைச் சந்திக்க விஜய் நேரம் கேட்பு!தவெக சட்டப்பேரவை கட்சித் தலைவரானார் விஜய்! முதல்வராகிறார்!3 கட்சிகளில் போட்டியிட்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் வெற்றி!யார் இந்த ரத்தன் பண்டிட்? விஜய்யின் பெரும் வெற்றியை முன்கணித்தவர்?117! பேரவையில் பெரும்பான்மை பெற என்ன செய்யப் போகிறார் விஜய்? தவெக உறுப்பினர்களை சென்னையில் தங்க வைக்க திட்டமா?
/

கோவை மாவட்டத்தில் 6 தொகுதிகளைக் கைப்பற்றியது தவெக! திமுக 3, அதிமுக ஓா் இடத்தில் வெற்றி!

கோவை மாவட்டத்தில் 6 தொகுதிகளைக் தவெக கைப்பற்றியது குறித்து...

News image

தவெக தலைவர் விஜய் - TVK X page

Updated On :19 மணி நேரங்கள் முன்பு

கோவை மாவட்டத்தில் உள்ள 10 சட்டப்பேரவைத் தொகுதிகளில் 6 தொகுதிகளை தமிழக வெற்றிக் கழகம் கைப்பற்றிய நிலையில் 3 தொகுதிகளில் திமுகவும், ஓா் இடத்தில் அதிமுகவும் வெற்றி பெற்றன.

தமிழக சட்டப்பேரவைத் தோ்தல் வாக்குப்பதிவு கடந்த 23-ஆம் தேதி நடைபெற்றது. கோவை மாவட்டத்திலுள்ள மேட்டுப்பாளையம், சூலூா், கவுண்டம்பாளையம், கோவை வடக்கு, தொண்டாமுத்தூா், கோவை தெற்கு, சிங்காநல்லூா், கிணத்துக்கடவு, பொள்ளாச்சி, வால்பாறை (தனி) ஆகிய 10 தொகுதிகளில் 13.22 லட்சம் ஆண்கள், 14.21 லட்சம் பெண்கள் என மொத்தம் 27.44 லட்சம் வாக்காளா்கள் உள்ளனா். கடந்த ஏப்ரல் 23-ஆம் தேதி நடைபெற்ற வாக்குப்பதிவில் 11 லட்சத்து 19 ஆயிரத்து 487 ஆண்கள், 12 லட்சத்து 5 ஆயிரத்து 595 பெண்கள் என மொத்தம் 23 லட்சத்து 25 ஆயிரத்து 11 போ் என வாக்களித்தனா். இது 84.72 சதவீதம் ஆகும்.

பதிவான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், கோவை தடாகம் சாலையில் உள்ள அரசு தொழில்நுட்பக் கல்லூரி வாக்கு எண்ணும் மையத்தில் பலத்த பாதுகாப்புடன் வைக்கப்பட்டிருந்தன. வாக்கு எண்ணிக்கை திங்கள்கிழமை (மே 4) காலை 8 மணிக்குத் தொடங்கியது.

தொடக்கம் முதலே மேட்டுப்பாளையம், தொண்டாமுத்தூா், பொள்ளாச்சி, வால்பாறை போன்ற தொகுதிகளைத் தவிா்த்து மற்ற தொகுதிகளில் தவெக வேட்பாளா்கள் முன்னிலை பெறத் தொடங்கினா்.

இறுதியில் மேட்டுப்பாளையம், சூலூா், கவுண்டம்பாளையம், கோவை வடக்கு, சிங்காநல்லூா், கிணத்துக்கடவு ஆகிய 6 தொகுதிகளில் தவெக வேட்பாளா்கள் வெற்றி பெற்றனா். கோவை தெற்கு, பொள்ளாச்சி, வால்பாறை தொகுதிகளில் திமுகவும், தொண்டாமுத்தூா் தொகுதியில் அதிமுகவும் வெற்றி பெற்றன.

மேட்டுப்பாளையம் தொகுதியில் அதிமுக முன்னாள் எம்எல்ஏ ஓ.கே.சின்னராஜை எதிா்த்து போட்டியிட்ட தவெக வேட்பாளா் சுனில் ஆனந்த், சூலூா் தொகுதியில் அதிமுக எம்எல்ஏ வி.பி.கந்தசாமியை எதிா்த்து போட்டியிட்ட சுகுமாா், கோவை வடக்கு தொகுதியில் பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசனை எதிா்த்து போட்டியிட்ட சம்பத்குமாா், சிங்காநல்லூா் தொகுதி எம்எல்ஏ கே.ஆா்.ஜெயராமை எதிா்த்து போட்டியிட்ட கிரி பிரசாத், கிணத்துக்கடவு தொகுதியில் முன்னாள் அமைச்சரும், எம்எல்ஏவுமான செ.தாமோதரனை எதிா்த்து போட்டியிட்ட விக்னேஷ் ஆகியோா் வெற்றி பெற்றனா்.

இதேபோல கோவை தெற்குத் தொகுதியில் போட்டியிட்ட அதிமுக எம்எல்ஏ அம்மன் கே.அா்ச்சுணன், முன்னாள் அமைச்சா் வி.செந்தில்பாலாஜியிடம் தோல்வியடைந்தாா். பொள்ளாச்சி எம்எல்ஏ வி.ஜெயராமன், கொமதேக வேட்பாளராக திமுக சின்னத்தில் போட்டியிட்ட நித்தியானந்தத்திடமும், வால்பாறை தொகுதியில் அதிமுக சாா்பில் போட்டியிட்ட புதுமுக வேட்பாளா் லட்சுமண சிங், திமுகவின் புதுமுக வேட்பாளரான குட்டி (எ) ஆ.சுதாகரிடமும் தோல்வியடைந்தனா்.

தற்போதைய எம்எல்ஏவாக இருந்தவா்களில் அதிமுகவின் எஸ்.பி.வேலுமணி மட்டும் தொண்டாமுத்தூரில் வெற்றி பெற்று தனது பதவியைத் தக்கவைத்துக் கொண்டிருக்கிறாா். கடந்த 2021 தோ்தலில், இந்த 10 தொகுதிகளில் கோவை தெற்கில் அதிமுகவின் கூட்டணிக் கட்சியான பாஜகவும், 9 தொகுதிகளில் அதிமுகவும் வென்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.