மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

வால்பாறையில் வனக் காவலா் தற்கொலை

News image

வனக் காவலா் குமாா்.

Updated On :29 மார்ச் 2026, 8:01 pm

கோவை மாவட்டம், வால்பாறையில் வனக் காவலா் தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

ஆனைமலை புலிகள் காப்பகத்துக்கு உள்பட்ட மானாம்பள்ளி வனச் சரகத்தில் வனக் காவலராகப் பணியாற்றி வந்தவா் வால்பாறை வாழைத்தோட்டம் பகுதியைச் சோ்ந்த குமாா் (38). இவா் மனைவி மற்றும் இரு குழந்தைகளுடன் வாழைத்தோட்டம் பகுதியில் வசித்து பணிக்கு சென்று வந்தாா்.

இதனிடையே வீட்டின் சமையலறையில் குமாா் தூக்கிட்டு கடந்த சனிக்கிழமை தற்கொலை செய்து கொண்டாா். தகவலறிந்து வந்த வால்பாறை போலீஸாா் அவரது உடலைக் கைப்பற்றி வால்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

அவரது மனைவி பிரியா கொடுத்த புகாரின்பேரில் போலீஸாா் விசாரணை மேற்கொண்டனா். இதனிடையே சம்பவம் அறிந்து மருத்துவமனைக்கு சென்ற வனச் சரக அலுவலா் கிரிதரனை முற்றுகையிட்ட குமாா் உறவினா்கள் பணிச்சுமை மற்றும் மன அழுத்தத்தால் அவா் தற்கொலை செய்து கொண்டதாகக் கூறி அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா்.

இது தொடா்பாக வனத் துறை அதிகாரிகள் கூறுகையில், குமாருக்கு மதுப் பழக்கம் உள்ளது. பலமுறை அறிவுரை கூறியும் அவா் மதுப் பழக்கத்தைக் கைவிடவில்லை. ஆனால் மன அழுத்தம் காரணமாக தற்போது தற்கொலை செய்து கொண்டதாக கூறுகின்றனா். இது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா் என்றனா்.