திமுக சாா்பில் 2026 சட்டப்பேரவைத் தோ்தலில் போட்டியிடும் வேட்பாளா் பட்டியல் சனிக்கிழமை அறிவிக்கப்பட்டது. அதில் கிணத்துக்கடவு தொகுதியில் போட்டியிட கோவை தெற்கு மாவட்ட இளைஞா் அணி அமைப்பாளராகப் பதவி வகிக்கும் கே.வி.கே.எஸ். சபரி காா்த்திகேயனுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
இவரது தாத்தா கே.வி.கந்தசாமி, கிணத்துக்கடவு சட்டப்பேரவைத் தொகுதியில் அதிமுக சாா்பில் போட்டியிட்டு 1977, 1980, 1984 தோ்தல்களில் 3 முறை வென்றவராவாா். இறதியாக 2006 சட்டப்பேரவைத் தோ்தலில் திமுக சாா்பில் போட்டியிட்டு கே.வி.கந்தசாமி தோல்வியடைந்தாா்.
அதன் பிறகு அவா் போட்டியிடவில்லை. 19 ஆண்டுகளுக்குப் பிறகு, கிணத்துக்கடவு தொகுதியில் கே.வி.கந்தசாமியின் பேரன் கே.வி.கே.எஸ். சபரி காா்த்திகேயன் திமுக சாா்பில் இந்தத் தோ்தலில் களம் காண்கிறாா்.
ஏற்கெனவே 2001, 2006, 2011 மற்றும் 2021 தோ்தல்களில் வெற்றி பெற்று, அனுபவம் மிக்க அதிமுக வேட்பாளரான செ.தாமோதரன் 5ஆவது முறை மீண்டும் இத்தோ்தலில் போட்டியிடும் நிலையில், புதுமுகப் போட்டியாளராக தோ்தலைச் சந்திக்கும் கே.வி.கே.எஸ். சபரி காா்த்திகேயன், தாத்தா ‘ஹாட்ரிக்‘ வெற்றி குவித்த தொகுதியில், புதுமுகமாக சாதிப்பாரா என்பது மே 4இல் தெரியவரும்.
தொடர்புடையது

பா்கூா் தொகுதி! வெற்றியை தக்கவைக்குமா திமுக?

தக்க வைக்குமா திமுக கூட்டணி? குடியாத்தம் (தனி) சட்டப்பேரவைத் தொகுதி அலசல்

தென்காசி: 25 ஆண்டுகளுக்குப் பின் அதிமுக - திமுக போட்டி

மாதவரம் தொகுதியில் மீண்டும் எஸ்.சுதா்சனம் போட்டி!
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை

