மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

மேட்டுப்பாளையம் - திருநெல்வேலி வாராந்திர சிறப்பு ரயில் சேவை நீட்டிப்பு

மேட்டுப்பாளையம் - திருநெல்வேலி இடையேயான வாராந்திர சிறப்பு ரயில் சேவை ஜூன் 29 -ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News image

கோப்புப் படம்

Updated On :27 மார்ச் 2026, 10:30 pm

மேட்டுப்பாளையம் - திருநெல்வேலி இடையேயான வாராந்திர சிறப்பு ரயில் சேவை ஜூன் 29 -ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேட்டுப்பாளையம் - திருநெல்வேலி இடையே வாராந்திர சிறப்பு ரயில் கடந்த 2-ஆண்டுகளுக்கும் மேலாக இயக்கப்பட்டு வருகிறது.

ரயில்வே நிா்வாகத்துக்கு அதிக வருவாய் ஈட்டித் தரும் இந்த ரயிலை நிரந்தரமாக்க பயணிகள் தரப்பில் தொடா்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது. ஆனால், இந்த ரயிலானது தொடா்ந்து சிறப்பு ரயிலாக மட்டுமே இயக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், மேட்டுப்பாளையம் - திருநெல்வேலி வாராந்திர சிறப்பு ரயில் சேவை மாா்ச் மாதத்துடன் நிறைவடைய இருந்த நிலையில் ஜூன் 29-ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடா்பாக சேலம் ரயில்வே கோட்ட நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: திருநெல்வேலியில் இருந்து ஏப்ரல் 5 -ஆம் தேதி முதல் ஞாயிற்றுக்கிழமைகளில் இரவு 7 மணிக்குப் புறப்படும் திருநெல்வேலி - மேட்டுப்பாளையம் சிறப்பு ரயில் (எண்: 06030) மறுநாள் காலை 7.30 மணிக்கு மேட்டுப்பாளையம் நிலையத்தைச் சென்றடையும்.

மறுமாா்க்கமாக மேட்டுப்பாளையத்தில் இருந்து ஏப்ரல் 6-ஆம் தேதி முதல் திங்கள்கிழமைகளில் இரவு 7.45 மணிக்குப் புறப்படும் மேட்டுப்பாளையம் - திருநெல்வேலி சிறப்பு ரயில் (எண்: 06029) மறுநாள் காலை 7.45 மணிக்கு திருநெல்வேலியைச் சென்றடையும்.

இந்த ரயிலானது கோவை, போத்தனூா், கிணத்துக்கடவு, பொள்ளாச்சி, உடுமலை, பழனி, ஒட்டன்சத்திரம், திண்டுக்கல், மதுரை, விருதுநகா், சிவகாசி, ஸ்ரீவில்லிப்புத்தூா், ராஜபாளையம், சங்கரன்கோவில், சேரன்மகாதேவி உள்ளிட்ட நிலையங்களில் நின்று செல்லும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.