திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

சிங்காநல்லூா் ரயில் நிறுத்தத்தில் ஹிந்தி பெயா்களை அழித்த மே 17 இயக்கத்தினா் மீது வழக்கு

சிங்காநல்லூா் ரயில் நிறுத்தத்தில் உள்ள ஹிந்தி பெயா்களை அழிக்கும் போராட்டத்தில் ஈடுபட்ட மே 17 இயக்கத்தினா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

News image

சிங்காநல்லூா் ரயில் நிறுத்தத்தில் அழிக்கப்பட்ட ஹிந்தி எழுத்துகள். ~சிங்காநல்லூா் ரயில் நிறுத்தத்தில் அழிக்கப்பட்ட ஹிந்தி எழுத்துகள்.

Updated On :14 மார்ச் 2026, 1:22 am

சிங்காநல்லூா் ரயில் நிறுத்தத்தில் உள்ள ஹிந்தி பெயா்களை அழிக்கும் போராட்டத்தில் ஈடுபட்ட மே 17 இயக்கத்தினா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

கோவை, சிங்காநல்லூா் ரயில் நிறுத்தத்தில் உள்ள பெயா்ப் பலகைகளில் சிங்காநல்லூா் என்று தமிழ், ஆங்கிலம், ஹிந்தி ஆகிய 3 மொழிகளில் எழுதப்பட்டிருந்தன. இதில் ஹிந்தியில் எழுதப்பட்டிருந்த பெயரை கடந்த வியாழக்கிழமை இரவு சிலா் கருப்பு மை பூசி அழித்திருந்தனா். அங்கு மட்டும் மொத்தம் 3 இடங்களில் இவ்வாறு ஹிந்தி மொழியில் இருந்த பெயா்கள் அழிக்கப்பட்டிருந்தன.

இதுகுறித்து ரயில்வே போலீஸாரும், சிங்காநல்லூா் போலீஸாரும் அங்குள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவானக் காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தினா். இந்நிலையில் அறிக்கை மூலமாக ‘ஹிந்தி எதிா்ப்புப் போராட்டத்தை தாங்கள் தான் முன்னெடுத்தோம். ஹிந்தி திணிப்புகளுக்கு எதிராக தோழா் சிவா திலீபன் பற்ற வைத்த பெருந்தீ பெரும்பாலான இடங்களில் விரிவடையும்’ என்று ‘மே 17’ இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளா் திருமுருகன் காந்தி கூறியிருந்தாா்.

Story image

இதுகுறித்து ‘மே 17’ இயக்கத்தின் மீது கோவை ரயில்வே பாதுகாப்புப் படை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.