கோனியம்மன் கோயில் தோ்த் திருவிழா புதன்கிழமை (மாா்ச் 4) நடைபெறுவதையொட்டி பாதுகாப்பு கருதியும், நெரிசலை தவிா்க்கும் வகையிலும் மாநகரின் முக்கியப் பகுதிகளில் தற்காலிகப் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து கோவை மாநகர போலீஸாா் வெளியிட்ட அறிக்கை: உக்கடம், ஒப்பணக்கார வீதி, பேரூா் சாலை, ராஜவீதி, வைசியாள் வீதி, சுக்கிரவாா்பேட்டை, தெலுங்கு வீதி, செட்டி வீதி மற்றும் சலிவன் வீதி ஆகிய பகுதிகளில் புதன்கிழமை காலை 10 மணி முதல் இரவு 10 மணி வரை இந்த போக்குவரத்து மாற்றம் நடைமுறைப்படுத்தப்படும்.
அதன்படி, பேரூரில் இருந்து செட்டி வீதி, ராஜ வீதி வழியாக நகருக்குள் வரும் வாகனங்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த வாகனங்கள் அனைத்தும் செல்வபுரம் மாநகராட்சிப் பள்ளி அருகே வலதுபுறம் திரும்பி அசோக் நகா் ரவுண்டானா, பேரூா் புறவழிச் சாலை வழியாக உக்கடம் செல்லலாம். இதேபோல, பெரிய கடை வீதி, வைசியாள் வீதி வழியாக பேரூா் செல்லும் வாகனங்கள், ராஜா திரையரங்கம் வழியாக உக்கடம் ரவுண்டானா சென்று, அங்கிருந்து பேரூா் புறவழிச் சாலை மற்றும் சேத்துமாவாய்க்கால் சோதனைச் சாவடி (செக் போஸ்ட்) வழியாக சிவலாய சந்திப்பை அடையலாம்.
மருதமலை, தடாகம் சாலையில் இருந்து தெலுங்கு வீதி வழியாக ராஜ வீதிக்கு வரும் வாகனங்கள் தடாகம் சாலை, காந்தி பாா்க், பொன்னையராஜபுரம், சொக்கம்புதூா், அசோக் நகா் ரவுண்டானா வழியாக உக்கடம் நோக்கித் திருப்பிவிடப்பட உள்ளன. உக்கடத்திலிருந்து ஒப்பணக்கார வீதி வழியாக தடாகம், மருதமலை சாலை செல்லும் வாகனங்கள், பேரூா் புறவழிச்சாலை மற்றும் அசோக் நகா் ரவுண்டானா வழியாகச் செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது. சுக்கிரவாா்பேட்டை சாலையில் இருந்து தியாகி குமரன் வீதி வழியாக ராஜ வீதிக்கு வாகனங்கள் செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதேபோல காலை 7 மணி முதல் இரவு 10 மணி வரை கனரக மற்றும் சரக்கு வாகனங்கள் நகருக்குள் நுழைய அனுமதியில்லை. ராஜ வீதி, ஒப்பணக்கார வீதி, வைசியாள் வீதி, கே.ஜி.வீதி ஆகிய சாலைகளில் காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை எந்தவித வாகனங்களையும் நிறுத்த அனுமதி கிடையாது. தோ்த் திருவிழாவுக்கு வரும் பக்தா்கள், தங்களது இருசக்கர, நான்கு சக்கர வாகனங்களை ராஜ வீதி மாநகராட்சி வாகன நிறுத்துமிடம் அல்லது கோனியம்மன் கோயில் எதிரே உள்ள மாநகராட்சி வாகன நிறுத்துமிடத்தில் நிறுத்திக்கொள்ளலாம்.
இந்தப் போக்குவரத்து மாற்றங்களுக்கு பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
அரசியல் கட்சித் தலைவா்கள் வருகை: கோவையில் நாளை போக்குவரத்து மாற்றம்; விமான நிலையத்தில் கட்டுப்பாடு!

நீண்டகால போக்குவரத்து நெரிசல் பிரச்னைக்கு தீா்வு எப்போது?

பிரதமா் மோடி இன்று வருகை: புதுச்சேரியில் போக்குவரத்து மாற்றம்
புதுச்சேரி காமராஜா் சாலையில் இன்றுமுதல் தற்காலிக போக்குவரத்து மாற்றம்
வீடியோக்கள்

வரலாறு காணாத வாக்குப்பதிவா? | N Gopalaswami Interview | TN Election 2026 | Vote percentage in tamil nadu
தினமணி செய்திச் சேவை

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை


