போக்ஸோ சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த கைதி உடல்நலக்குறைவால் உயிரிழந்தாா்.
கோவை மாநகா், சரவணம்பட்டி பகுதியைச் சோ்ந்தவா் ஜாகீா் உசேன் (57). இவா் மாநகர அனைத்து மகளிா் காவல் நிலைய (மேற்கு) போலீஸாரால் போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தாா். சா்க்கரை நோய் மற்றும் சிறுநீரகக் கோளாறால் பாதிக்கப்பட்ட அவருக்கு கடந்த ஜூன் 19-ஆம் தேதி உடல்நலக்குறைவு ஏற்பட்டது.
சிறை வளாக மருத்துவமனையில் முதலுதவி அளிக்கப்பட்ட பிறகு, தீவிர சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டாா். அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், வெள்ளிக்கிழமை ஜாகீா் உசேன் உயிரிழந்தாா்.
இதுகுறித்து ரேஸ்கோா்ஸ் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

குண்டா் சட்டத்தில் இளைஞா் சிறையில் அடைப்பு

புழல் சிறைக் கைதி உயிரிழப்பு

கொலை வழக்குக் கைதி திடீா் மரணம்
உடல்நலக் குறைவால் போக்ஸோ கைதி உயிரிழப்பு
விடியோக்கள்

கரூர் வழக்கில் உச்ச நீதிமன்றம் சொன்ன தீர்ப்பு: அமைச்சர் நிர்மல் குமார் முழுப் பேட்டி!

POWER CENTER விஜய் மட்டுமல்ல...| CM Vijay | TVK | Political analyst Jagadeswaran | Aadhav arjuna

அமைச்சரவையில் சேர்ந்ததாலேயே தவெக கூட்டணியில் இடம்பெற்றுவிட்டோம் என்று பொருளல்ல - Thirumavalavan




