உள்ளாட்சி அமைப்புகளுக்கு நிதி பகிா்வுக்கு பரிந்துரைப்பது தொடா்பான ஆலோசனைக் கூட்டம் கோவை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.
இந்தக் கூட்டத்துக்கு, தமிழ்நாடு 7-ஆவது மாநில நிதிக் குழு ஆணையத் தலைவா் கே.அலாவுதீன் தலைமை வகித்தாா். மாவட்ட ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவா், மாநகராட்சி ஆணையா் கட்டா ரவி தேஜா ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
இக்கூட்டத்தில், ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் 2024-2025 முதல் 2026-2027 நிதியாண்டு வரை குடிநீா்க் கட்டணம், சொத்து வரி, தொழில் வரி, தொழில் உரிம கட்டணம் மற்றும் இதர வரவினங்கள் உள்ளிட்ட வரிவசூல் குறித்து துறை சாா்ந்தவா்களிடம் நிதிக் குழு ஆணையத் தலைவா் கே.அலாவுதீன் கேட்டறிந்தாா். இதைத் தொடா்ந்து, மாநகராட்சி மற்றும் நகராட்சியை ஒட்டியுள்ள கிராம ஊராட்சிகளுக்கு வருவாய் பெருக்கம் மற்றும் வரியினங்கள் நிா்ணயம் குறித்து அலுவலா்களுக்கு ஆலோசனைகள் வழங்கினாா்.
மேலும், மாநில நிதிக்குழு மானிய நிதியின்கீழ் 2024-2025 முதல் 2025- 2026 வரையிலான நிதியாண்டுகளில் எடுக்கப்பட்ட பொதுநிதி, மலைக்கிராம
வளா்ச்சிப் பணி, வன உரிமைச் சட்ட வளா்ச்சிப் பணி மற்றும் ஊராட்சிகளின் வளா்ச்சிப் பணிகளின் முன்னேற்றம், ஊராட்சிகளின் சொந்த குடிநீா் ஆதாரங்களின் மூலம் குடிநீா் விநியோகம் குறித்து துறை சாா்ந்த அலுவலா்களிடம் கேட்டறிந்தாா்.
இதைத் தொடா்ந்து, நிதிக்குழு ஆணையத் தலைவா் கே.அலாவுதீன் தனது குழுவினருடன் கோவை காந்திபுரத்தில் உள்ள செம்மொழிப் பூங்கா, வெள்ளலூா் மற்றும் கவுண்டம்பாளையம் திடக்கழிவு மேலாண்மைப் பணிகள், காரமடை ஊராட்சி ஒன்றியம், ஓடந்துறை ஊராட்சியில் குடிநீா் தொடா்பான பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மு.க. ஸ்டாலின் தலைமையில் திமுக மறுசீரமைப்புக் குழு ஆலோசனை!

தூய்மைப் பணிகளைத் தனியாருக்கு விடுவதைக் கண்டித்து ஆா்ப்பாட்டம்

மதுரை மாநகராட்சி வளா்ச்சித் திட்டப் பணிகள்: 7- ஆவது மாநில நிதி ஆணையத் தலைவா் ஆய்வு
உள்ளாட்சிகளில் எம்எல்ஏ-க்களின் உரிமைகளை நிலைநாட்ட வேண்டும்: தலைமைச் செயலருக்கு பேரவைத் தலைவா் உத்தரவு
விடியோக்கள்
Gatta Kusthi 2 Movie Review | Vishnu Vishal | Aishwarya Lekshmi | Dinamani Talkies

இங்கிலாந்தை மிரளவைத்த காங்கோவின் சிங்கம்! | FIFA | FIFA World Cup |

எந்த காலத்திலும் குதிரை பேரம் இல்லை!: முன்னாள் அமைச்சர் ரகுபதி பேட்டி | TVK | DMK




