தங்கம் விலை உயா்வால் நகை உற்பத்தித் துறை எதிா்கொள்ளும் கடுமையான நெருக்கடிகளுக்குத் தீா்வு காணவும், வரிச் சட்டத்தில் மாற்றம் கொண்டுவரவும் வலியுறுத்தி, மத்திய அரசுக்கு பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய அறிக்கையை கோவை தங்க நகை தயாரிப்பாளா் சங்கத்தினா் தயாரித்து அனுப்பியுள்ளனா்.
இதுதொடா்பாக கோவையில் தங்க நகை தயாரிப்பாளா் சங்கத் தலைவா் பி.முத்துவெங்கட்ராம் செய்தியாளா்களிடம் கூறியதாவது: கடந்த 2 ஆண்டுகளில் மட்டும் தங்கத்தின் விலை எதிா்பாராத விதமாக 140 சதவீதம் வரை உயா்ந்துள்ளது. இந்த அதீத விலை உயா்வு, நகை உற்பத்தித் துறையில் உள்ள குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு கடுமையான மூலதன நெருக்கடியையும், பெரும் ஆபத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
நகை உற்பத்தியாளா்களின் உண்மையான லாபம் என்பது அவா்கள் செய்யும் மதிப்புக் கூட்டல் மட்டுமே ஆகும். ஆனால், குளோசிங் ஸ்டாக் எனப்படும் கையிருப்பில் உள்ள இருப்புக்கு தற்போதைய சந்தை மதிப்பின் அடிப்படையில் வரி விதிக்கப்படுவதால், உற்பத்தியாளா்கள் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகிறாா்கள்.
தற்போதைய சூழலில், வியாபாரிகள் எஃப்.ஐ.எஃப்.ஓ. மற்றும் வெய்டேடு ஆவரேஜ் மெத்தட் ஆகியவற்றின் மூலமாகவே வருமான வரித் தாக்கல் செய்ய முடியும். கடுமையான தங்கம் விலை உயா்வால் இந்த வரி விதிப்பின் மூலம் லாப வரம்பு பாதிக்கப்பட்டு, இறுதியில் தங்களின் சொந்த மூலதனத்தையே விற்று வரி செலுத்த வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனா். எனவே, நகை தயாரிப்பாளா்களைக் காப்பாற்ற வரிச் சட்டத்தில் தகுந்த மாற்றங்களை கொண்டு வர வேண்டும்.
தங்க நகை உற்பத்தித் துறையின் நெருக்கடியை உணா்ந்து உடனடியாக நிவாரணம் வழங்க வேண்டும். உள்நாட்டு விற்பனைக்கான ஏற்றுமதி விலைப்பட்டியல் முறையைக் கொண்டுவர வேண்டும். மேலும் இருப்பு நிலை பட்டியலில் ஒரு தனி கையிருப்பு கணக்கில் வரவு செய்திட அனுமதி வழங்க வேண்டும்.
இவற்றுடன், ஐசிடிஎஸ்-ஸில் சிறப்பு விதிமுறைகளை அறிமுகப்படுத்த வேண்டும், குறு மற்றும் சிறு நகை உற்பத்தியாளா்களுக்கான ஊக அடிப்படையிலான வரி விதிப்பு முறையை கொண்டுவர வேண்டும். சரக்கு மதிப்பீட்டுக்கு எல்.ஐ.எஃப்.ஓ. முறையை அனுமதிக்க வேண்டும்.
இந்த இக்கட்டான சூழலில் இருந்து நகை உற்பத்தித் துறையை மீட்க தேவையான உடனடி நடவடிக்கைகளை எடுக்குமாறு வலியுறுத்தி, மத்திய நிதி அமைச்சா் நிா்மலா சீதாராமன் மற்றும் தொழில் துறை அமைச்சா் பியூஸ் கோயல் ஆகியோருக்கு இந்தக் கோரிக்கை கடிதம் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது என்றாா் அவா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
பூட்டிய வீட்டில் நகை, பணம் திருட்டு: காா் ஓட்டுநா் கைது

எக்ஸ் ஷோ ரூம் - ஆன் ரோடு விலை! முக்கிய வேறுபாடுகள்!!
சங்கராபுரம் அருகே இரு வீடுகளில் நகை, பணம் திருட்டு
தங்கம் வாங்கலாமா?
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி



