ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

கோவை குற்றாலத்தில் வெள்ளப்பெருக்கு: சூழல் சுற்றுலா தளம் மூடல்!

கோவை குற்றாலத்தில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளதையடுத்து சூழல் சுற்றுலா தளம் மூடப்பட்டுள்ளது பற்றி..

சூழல் சுற்றுலா தளம் மூடல்

Published On :29 ஜூலை 2026, 12:31 pm IST

கோவை குற்றாலத்தில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளதையடுத்து சூழல் சுற்றுலா தளத்திற்குப் பயணிகள் செல்ல வனத்துறை தடை விதிக்கப்பட்டுள்ளது.

மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் தொடர்ந்து பெய்துவரும் கனமழை காரணமாகக் கோவை குற்றாலம் அருவியில் கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், பொதுமக்களின் பாதுகாப்பு கருதி கோவை குற்றாலம் சூழல் சுற்றுலா இன்று (ஜூலை 29) தற்காலிகமாக மூடப்படுவதாக வனத்துறை அறிவித்துள்ளது.

​கோவையின் முக்கியச் சுற்றுலாத் தலங்களில் ஒன்றான சாடிவயல் - கோவை குற்றாலம் பகுதியில், நாள்தோறும் ஆயிரக்கணக்கான உள்ளூர், வெளியூர் மற்றும் வெளி மாநில சுற்றுலாப் பயணிகள் வந்து அருவியில் நீராடி மகிழ்வது வழக்கம்.

இந்த நிலையில், கடந்த சில நாள்களாக மேற்குத் தொடர்ச்சி மலைக் காடு மற்றும் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்துவரும் அதிமேலடுக்கு மழை காரணமாக அருவிக்கு வரும் நீரின் அளவு ஆபத்தான கட்டத்தைத் தாண்டி உள்ளது. ​

அருவியில் சீறிப்பாயும் வெள்ள நீரால் சுற்றுலாப் பயணிகளுக்குப் பேராபத்து ஏற்படும் என்பதைக் கருத்தில் கொண்டு, போளுவாம்பட்டி வனச்சரக அலுவலர் வனத்துறை சார்பில் அவசர அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு உள்ளார்.

அதில், "பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பைக் கருதி, கோவை குற்றாலம் சூழல் சுற்றுலா இன்று (29/07/2026) முதல் தற்காலிகமாக மூடப்படுகிறது. நீர்வரத்து சீராகி இயல்பு நிலை திரும்பிய பின்னரே மீண்டும் சுற்றுலாப் பயணிகள் அனுமதிக்கப்படுவர்" எனத் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதனால் இன்று கோவை குற்றாலம் செல்லத் திட்டமிட்டு இருந்த சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்லும் நிலை ஏற்பட்டு உள்ளது.

Regarding the closure of the eco-tourism site at Kovai Kutralam due to a surge in water levels...

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.