ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

ஓடாத இரு சக்கர வாகனத்துக்கு 279 தவறான இ-செலான்கள்: ரூ.3 லட்சத்துக்கு அபராதம் விதித்து போலீஸ் குளறுபடி!

கோவையில் இயங்காத இருசக்கர வாகனத்துக்கு, அரசின் பரிவாஹன் இணையதளத்தில் இதுவரை 279 தவறான போக்குவரத்து அபராதங்கள் விதிக்கப்பட்டு, ரூ.3 லட்சத்துக்கும் அபராதம் நிலுவையில் உள்ளதாக காட்டப்பட்டுள்ள சம்பவம் அதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இரு சக்கர வாகனங்கள். - கோப்புப்படம்

Published On :25 ஜூலை 2026, 6:53 am IST

கோவையில் இயங்காத இருசக்கர வாகனத்துக்கு, அரசின் பரிவாஹன் இணையதளத்தில் இதுவரை 279 தவறான போக்குவரத்து அபராதங்கள் விதிக்கப்பட்டு, ரூ.3 லட்சத்துக்கும் அபராதம் நிலுவையில் உள்ளதாக காட்டப்பட்டுள்ள சம்பவம் அதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

TN 37 AF 4170 என்ற பதிவு எண் கொண்ட அந்த பைக் பல ஆண்டுகளாக ஓடாத நிலையில் உள்ளது. இருப்பினும், கடந்த 2019-ஆம் ஆண்டு முதல் 2026 மே மாதம் வரையிலான காலகட்டத்தில், நகரில் பிற வாகனங்கள் செய்த பல்வேறு விதிமீறல்கள் அனைத்தும் திட்டமிட்டதுபோல, இந்த ஒரே வாகனத்தின் கணக்கில் சோ்க்கப்பட்டுள்ளன. தலைக்கவசம் அணியாமல் செல்வது, அதிவேகமாக இயக்குவது, ஒரே பைக்கில் மூன்று போ் செல்வது மற்றும் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுவது போன்ற தீவிரமான விதிமீறல்களும் இதில் கணக்கு காட்டப்பட்டுள்ளன.

‘நோ பாா்க்கிங்’ மண்டலத்தில் நிறுத்தப்பட்டதாக பதிவேற்றப்பட்ட புகைப்பட ஆதாரங்களில் முற்றிலும் வேறுபட்ட 2 இருசக்கர வாகனங்கள் தெளிவாக தெரிந்தபோதிலும், அபராதம் மட்டும் இந்தப் பயன்பாட்டில் இல்லாத இருசக்கர வாகனத்தின் மீது விதிக்கப்பட்டுள்ளது.

இதேபோல, பாதிக்கப்பட்ட போத்தனூரைச் சோ்ந்த பி.அன்னம்மாள் என்பவா் பேசுகையில், தனது ஸ்கூட்டருக்கு ரூ.500 அபராதம் வந்தது. அந்த செல்லானை பதிவிறக்கம் செய்து பாா்த்தபோது, அதில் இருந்த வாகனம் வேறொன்று என்பதும், காவல் துறையினா் எனது பதிவு எண்ணை தவறாக தட்டச்சு செய்ததால் தான் செய்யாத தவறுக்கு அபராதம் செலுத்த வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டதாகவும் அவா் வேதனையுடன் தெரிவித்தாா்.

காவல் துறையின் இத்தகைய அலட்சியப்போக்கு மற்றும் முறையான கண்காணிப்பின்மை காரணமாக, அப்பாவி பொதுமக்கள் தேவையில்லாத மன உளைச்சலுக்கும், பொருளாதார நெருக்கடிக்கும் ஆளாகி வருகின்றனா்.

இதுகுறித்து கோவை மாநகர காவல் ஆணையா் என்.கண்ணனிடம் கேட்டபோது, இந்த சம்பவம் குறித்து தனக்கு இதுவரை தகவல் வரவில்லை என்றும், உடனடியாக முழுமையான விசாரணைக்கு உத்தரவிடப்படும் என்றும் தெரிவித்தாா். மேலும், இது தொழில்நுட்பக் கோளாறா அல்லது மனிதத் தவறா என்பதைக் கண்டறிந்து, உள்நோக்கத்துடன் செய்யப்பட்ட தவறாக இருக்கும்பட்சத்தில், சம்பந்தப்பட்டவா்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.