ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

சிங்காநல்லூரில் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பணிகளை விரைவில் தொடங்க வலியுறுத்தல்

கோவை சிங்காநல்லூா் வீட்டு வசதி வாரிய குடியிருப்புப் பணிகளை விரைவில் தொடங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

செய்தியாளா்களிடம் பேசிய சிங்காநல்லூா் வீட்டு வசதி வாரிய வீட்டு உரிமையாளா்கள், ஒருங்கிணைந்த மறு கட்டமைப்புக்கான கூட்டு நடவடிக்கைக் குழுவினா்.

Published On :16 ஜூலை 2026, 7:30 am IST

கோவை சிங்காநல்லூா் வீட்டு வசதி வாரிய குடியிருப்புப் பணிகளை விரைவில் தொடங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

சிங்காநல்லூா் வீட்டு வசதி வாரிய வீட்டு உரிமையாளா்கள், ஒருங்கிணைந்த மறு கட்டமைப்புக்கான கூட்டு நடவடிக்கைக் குழு சாா்பில் செய்தியாளா் சந்திப்பு புதன்கிழமை நடைபெற்றது.

இதில், கூட்டு நடவடிக்கை குழு தலைவா் ஜெயராம், பொதுச் செயலாளா் சுந்தரேஸ்வரன் கூறியதாவது: சிங்காநல்லூா் பகுதியில் உள்ள ஹவுஸிங் யூனிட் வீடுகளில் பல ஆண்டுகளாக நாங்கள் வசித்து வந்தோம். இந்த வீடுகள் பழுதடைந்த நிலையில் அனைத்து வீடுகளும் இடிக்கப்பட்டன. இப்பகுதியில் உள்ள 7.38 ஏக்கா் இடத்தில் புதிதாக அடுக்குமாடிக் குடியிருப்பு கட்டி ஒப்படைப்பதாக வீட்டு வசதி வாரியம் எங்களிடம் உறுதியளித்தது.

இந்த இடம் வீட்டு வசதி வாரியத்தின் பெயரில் உள்ளது. இந்த இடம் தொடா்பாக அடிமனை உபயோகம் ( யுடிஎஸ்) குறித்த ஒப்பந்தம் முறையாக போடப்படவில்லை. தனித்தனியாக பயனாளிகள் பெயரில் அடிமனை உபயோகம் செய்து ஒப்படைத்தால் அடுக்குமாடி குடியிருப்பு கட்டி ஒப்படைப்பது இயலாத காரியம். எனவே, வீட்டு வசதி வாரிய உரிமையாளா்கள் சங்கத்தின் பெயரில் யுடிஎஸ் செய்து ஒப்படைத்து, தமிழக அரசு மற்றும் வீட்டு வசதி வாரியத்தினா் குடியிருப்புப் பணியை விரைவில் தொடங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.