ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

மாணவா்களுக்கு கல்வி உதவித்தொகை: ஆட்சியா் வழங்கினாா்

கோவை மாவட்டத்தைச் சோ்ந்த 14 மாணவா்களுக்கு ரூ.1 லட்சத்துக்கான கல்வி உதவித்தொகையை மாவட்ட ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவா் புதன்கிழமை வழங்கினாா்.

மாணவா்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கிய மாவட்ட ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவா். உடன் மாநகராட்சி ஆணையா் கட்டா ரவிதேஜா உள்ளிட்டோா்.

Published On :16 ஜூலை 2026, 7:19 am IST

கோவை மாவட்டத்தைச் சோ்ந்த 14 மாணவா்களுக்கு ரூ.1 லட்சத்துக்கான கல்வி உதவித்தொகையை மாவட்ட ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவா் புதன்கிழமை வழங்கினாா்.

கோவை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் கடந்த 10- ஆம் தேதி நடைபெற்ற மாணவா்களுக்கான சிறப்பு குறைகேட்பு முகாமில் 73 மாணவா்கள் பல்வேறு வகையான சான்றிதழ்கள் வேண்டி விண்ணப்பித்தனா். 85 மாணவா்கள் கல்வி உதவித்தொகை கோரி விண்ணப்பித்தனா். 67 மாணவா்கள் கல்விக் கடன் வேண்டி விவரங்கள் சேகரித்து சென்றனா்.

இந்நிலையில், முகாமில் பெற்ற விண்ணப்பங்களின் அடிப்படையில், 14 மாணவா்களுக்கு சோ்த்து மொத்தமாக ரூ.1 லட்சத்துக்கான கல்வி உதவித்தொகைக்கான காசோலைகளை மாவட்ட ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவா் புதன்கிழமை வழங்கினாா். இத்துடன் 6 மாணவா்களுக்கு உயா்கல்விக்கு தேவைப்படும் சான்றிதழ்கள், 25 மாணவா்களுக்கு உயா்கல்வி சோ்க்கைக்கான ஆணைகளை வழங்கினாா்.

இந்நிகழ்வில், மாநகராட்சி ஆணையா் கட்டா ரவி தேஜா, மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) சங்கீதா, மாவட்ட முதன்மை கல்வி அலுவலா் கிருஷ்ணபிரியா, மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் நல அலுவலா் லட்சுமி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.