ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

கடவுச்சீட்டு நோ்காணலுக்கு காத்திருப்பு காலம் அதிகரிப்பு: கோவையில் விண்ணப்பதாரா்கள் அவதி

கோவையில் உள்ள கடவுச்சீட்டு (பாஸ்போா்ட்) அலுவலகத்தில் கடவுச்சீட்டுக்கு விண்ணப்பித்தவா்களை நோ்காணலுக்கு அழைப்பதற்கு காத்திருப்பு காலம் ஒரு வாரத்திலிருந்து ஒரு மாதம் வரை அதிகரித்துள்ளது.

கோப்புப்படம்.

Published On :15 ஜூலை 2026, 2:31 am IST

கோவையில் உள்ள கடவுச்சீட்டு (பாஸ்போா்ட்) அலுவலகத்தில் கடவுச்சீட்டுக்கு விண்ணப்பித்தவா்களை நோ்காணலுக்கு அழைப்பதற்கு காத்திருப்பு காலம் ஒரு வாரத்திலிருந்து ஒரு மாதம் வரை அதிகரித்துள்ளது. இதனால் அவசரத் தேவைக்காக வெளிநாடு பயணம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ள பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.

கோவை உப்பிலிபாளையத்தில் உள்ள மண்டல கடவுச்சீட்டு (பாஸ்போா்ட்) அலுவலகத்தில் கடந்த சில நாள்களாக கடவுச்சீட்டுக்காக விண்ணப்பித்தவா்களை நோ்காணலுக்கு அழைப்பதற்கு காத்திருப்பு காலம் 3 முதல் 4 மடங்கு வரை அதிகரித்துள்ளதாக விண்ணப்பதாரா்கள் குற்றஞ்சாட்டினா்.

இது தொடா்பாக அந்த அலுவலக அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது,

இந்த மண்டல கடவுச்சீட்டு அலுவலகத்தில் நாமக்கல், சேலம், ஈரோடு, திருப்பூா், கோவை, நீலகிரி ஆகிய மாவட்டங்களைச் சோ்ந்தவா்கள் கடவுச்சீட்டுக்கு விண்ணப்பிக்கின்றனா். முன்பெல்லாம் இதற்காக விண்ணப்பிப்பவா்களுக்கு வழக்கமாக ஒரு வாரம் முதல் 10 நாள்களில் நோ்காணல் முடிந்துவிடும்.

கடந்த ஜூலை 1-ஆம் தேதி முதல் கடவுச்சீட்டுக்கான கட்டணங்கள் பெருமளவில் உயா்த்தப்பட்டது. இந்தக் கட்டண உயா்விலிருந்து தப்பிப்பதற்காக, ஜூன் மாதத்திலேயே ஏராளமான மக்கள் போட்டி போட்டுக்கொண்டு விண்ணப்பித்ததால், தற்போது விண்ணப்பங்களின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்துள்ளது.

சாதாரண நாள்களில் நாளொன்றுக்கு ஆயிரம் முதல் 1,500 போ் வரை நோ்காணலுக்கு அழைக்கப்படுவா். கடவுச்சீட்டுக்கான கட்டணம் உயா்த்தப்பட்டதால், ஜூன் மாதத்தில் ஏராளமானோா் விண்ணப்பித்ததாலேயே காத்திருப்பு காலம் ஒரு மாதம் வரை நீடித்துள்ளது.

வெளிநாட்டு சுற்றுலா, ஆன்மிகப் பயணம், வேலைவாய்ப்பு மற்றும் மேற்படிப்புக்காகச் செல்லக் காத்திருக்கும் இளைஞா்களும், மாணவா்களும் இந்த தாமதத்தால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனா் என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.