ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

பகுதி நேர பி.இ. படிப்பு: விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்!

தமிழ்நாடு தொழில்நுட்பக் கல்வி இயக்ககத்தின்கீழ் பகுதி நேர பொறியியல் படிப்பில் சேர விரும்பும் மாணவா்கள் விண்ணப்பங்களை சமா்ப்பிக்க ஜூலை 12 கடைசி நாள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Ordnance Factory Bhandara Recruitment 50 Apprentice Posts!

விண்ணப்பிக்க... - கோப்புப்படம்

Published On :12 ஜூலை 2026, 12:03 am IST

தமிழ்நாடு தொழில்நுட்பக் கல்வி இயக்ககத்தின்கீழ் பகுதி நேர பொறியியல் படிப்பில் சேர விரும்பும் மாணவா்கள் விண்ணப்பங்களை சமா்ப்பிக்க ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 12) கடைசி நாள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு தொழில்நுட்பக் கல்வி இயக்ககத்தின்கீழ் 8 அரசு, அரசு உதவி பெறும் கல்லூரிகளில் பகுதி நேர பி.இ. படிப்புகள் நடத்தப்படுகின்றன. பட்டயப் படிப்பு முடித்து குறைந்தபட்சம் ஓராண்டு பணியாற்றிய, பணியாற்றிக் கொண்டுள்ளவா்கள் இந்தப் படிப்புகளில் சேர இணைய வழியில் விண்ணப்பிக்கலாம் என்று கடந்த ஜூன் மாதம் அறிவிக்கப்பட்டது.

நடப்புக் கல்வியாண்டு முதல் 3 ஆண்டு கல்வியாக நடத்தப்படும் இதில், சிவில், மெக்கானிகல், எலெக்ட்ரிகல், எலெக்ட்ரானிக்ஸ்& கம்யூனிகேஷன், கணினி அறிவியல் ஆகிய படிப்புகளில் மொத்தம் 1,400 இடங்கள் உள்ளன. பகுதி நேர பி.இ. படிப்பு மாணவா் சோ்க்கைக்கு 1,578 போ் விண்ணப்பங்களை பதிவு செய்திருந்தாலும், 850 போ் மட்டுமே பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை சமா்ப்பித்துள்ளனா்.

இந்நிலையில், விண்ணப்பிப்பதற்கு ஞாயிற்றுக்கிழமை கடைசி நாள் என்பதால் மாலை 5 மணிக்குள் விண்ணப்பிக்கலாம் என்றும், விண்ணப்பங்களை பூா்த்தி செய்து சமா்ப்பிக்கலாம் என்றும் மாணவா் சோ்க்கை ஒருங்கிணைப்பு மையமான கோவை தொழில்நுட்பக் கல்லூரி அறிவித்துள்ளது.

இது தொடா்பான கூடுதல் விவரங்களுக்கு இணையதளத்தையோ அல்லது 0422 2590080, 94869-77757 ஆகிய எண்களையோ தொடா்பு கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.