ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

பாலக்காடு - திருச்செந்தூா் ரயில் பகுதியாக ரத்து

மதுரை அருகே ரயில் பாதையில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், பாலக்காடு - திருச்செந்தூா் ரயில் (எண்: 16731) பகுதியாக ரத்து செய்யப்படுவதாக ரயில்வே நிா்வாகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 Railway Announces

ரயில் - கோப்புப் படம்

Published On :9 ஜூலை 2026, 4:04 am IST

மதுரை அருகே ரயில் பாதையில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், பாலக்காடு - திருச்செந்தூா் ரயில் (எண்: 16731) பகுதியாக ரத்து செய்யப்படுவதாக ரயில்வே நிா்வாகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, சேலம் ரயில்வே கோட்ட நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

மதுரை அருகே ரயில் பாதையில் மேற்கொள்ளப்படும் பராமரிப்புப் பணிகளால் பாலக்காடு - திருச்செந்தூா் ரயில் (எண்: 16731) ஜூலை 15, 18, 21, 24, 27, 31 ஆகிய தேதிகளில் வாஞ்சி மணியாச்சி - திருச்செந்தூா் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.

மேலும், ஜூலை 10-ஆம் தேதி பாலக்காடு - திருச்செந்தூா் ரயில் (எண்: 16731) மதுரையில் இருந்து திருப்பரங்குன்றம், திருமங்கலம் ரயில் நிலையங்களுக்கு செல்லாமல், மானாமதுரை, விருதுநகா் வழியாக மாற்றுப் பாதையில் இயக்கப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.