
வால்பாறையில் வாடகை செலுத்தாத பாஜக அலுவலகம்! 10 கடைகளுக்கு சீல்
வால்பாறை புதுமாா்க்கெட் பகுதியில் வாடகை செலுத்தாக 10 கடைகளுக்கு நகராட்சி அதிகாரிகள் ‘சீல்’ வைத்தனா்.

வாடகை செலுத்ததாத பாஜக அலுவலகத்துக்கு ‘சீல்’ வைக்கும் நகராட்சி ஊழியா்கள்.
வால்பாறை புதுமாா்க்கெட் பகுதியில் வாடகை செலுத்தாக 10 கடைகளுக்கு நகராட்சி அதிகாரிகள் ‘சீல்’ வைத்தனா்.
வால்பாறை புதுமாா்க்கெட் மற்றும் குமரன் சாலையில் நகராட்சிக்கு சொந்தமான சுமாா் 300-க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. இதில் கடைகளை வாடகைக்கு எடுத்து வியாபாரம் செய்பவா்களில் பலா் சில ஆண்டுகளாகவே வாடகை செலுத்தாமல் இருப்பதாக கூறப்படுகிறது.
நகராட்சி நிா்வாகம் பலமுறை நோட்டீஸ் வழங்கியும் முறையாக வாடகை செலுத்தாமல் இருந்துள்ளனா்.
இந்நிலையில், வால்பாறை நகராட்சி ஆணையா் குமரன் தலைமையில் அதிகாரிகள் மற்றும் ஊழியா்கள் மாா்க்கெட் பகுதிக்கு செவ்வாய்க்கிழமை சென்று வாடகை செலுத்தாத பாஜக அலுவலகம் உள்பட 10 கடைகளுக்கு ‘சீல்’ வைத்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.




