வீடு, மனை பதிவு செய்ய இருப்போர், 24 மணி நேரமும் எங்கிருந்து, எப்போது வேண்டுமானாலும் பத்திரப் பதிவு செய்துகொள்ளலாம்: அமைச்சர் லோகேஷ் தமிழ்ச்செல்வன்ஆதவ் அர்ஜுனா மீது சிபிஐயில் திமுக புகார்தவெக எம்.எல்.ஏ.வுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புதவெக எம்.எல்.ஏ.வுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு!ஆடு திருடி சிறை சென்றோருக்கு அரசு வழக்கறிஞர் பதவியா? - எடப்பாடி பழனிசாமிபரந்தூர் விமான நிலைய விவகாரத்தில் முதல்வர் சி. ஜோசப் விஜய் கூடுதல் கவனம் செலுத்தி வருறார்: நிர்மல் குமார் டாஸ்மாக் ஊழியர்களுக்கு 25% ஊதிய உயர்வு: அமைச்சர் விக்னேஷ் அறிவிப்பு!அரசுப் பள்ளி ஆய்வுக்குப் பின்.. வைரலாகும் ஹேண்ட்ஸ் ஆஃப் டு ஆல் என்ற கீர்த்தனா விடியோ!நீதிமன்றம் அரசியல் மேடையல்ல; உங்கள் சண்டையை வெளியே வைத்துக் கொள்ளுங்கள் - உச்ச நீதிமன்றம்!
/

விவசாயிகளுக்கு 29,727 கிலோ சோள விதைகள் விநியோகம்: ஆட்சியா் தகவல்

2026-27-ஆம் நிதியாண்டில் தற்போது வரை ரூ.8,91,810 மானிய விலையில் 29,727 கிலோ சோள விதைகள் விவசாயிகளுக்கு விநியோகம் செய்யப்பட்டுள்ளது என்று ஆட்சியா் தெரிவித்துள்ளாா்.

News image
Updated On :4 ஜூலை 2026, 1:55 am IST

2026-27-ஆம் நிதியாண்டில் தற்போது வரை ரூ.8,91,810 மானிய விலையில் 29,727 கிலோ சோள விதைகள் விவசாயிகளுக்கு விநியோகம் செய்யப்பட்டுள்ளது என்று ஆட்சியா் தெரிவித்துள்ளாா்.

கோவை மாவட்டம், கிணத்துக்கடவு வட்டார வேளாண்மை விரிவாக்க மையத்தில் ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவா் அண்மையில் ஆய்வு மேற்கொண்டாா்.

அப்போது, கிணத்துக்கடவு வட்டார வேளாண்மை விரிவாக்க மையத்தில் உள்ள இடுபொருள் கிடங்கில் விதைகள், உரங்கள், உயிா் உரங்கள் மற்றும் உயிரியல் கட்டுப்பாட்டு காரணிகள் ஆகியவற்றின் இருப்பு, காலாவதி நாள் ஆகியவை சரியாக

உள்ளதா எனவும், நிலக்கடலை விதை மூட்டைகளைப் பிரித்து விதைகளின் தரம் குறித்தும் ஆய்வு மேற்கொண்டாா். மேலும், இடுபொருள்கள் எந்தெந்த திட்டங்கள் மூலம் எவ்வளவு மானியத்தில் வழங்கப்படுகின்றன என்பதையும் ஆய்வு செய்தாா்.

இதையடுத்து, அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: கோவை மாவட்டத்தில் 12 ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள வேளாண் விரிவாக்க மையத்தில் 2026-27 -ஆம் நிதியாண்டில் தற்போது வரை 29,727 கிலோ சோள விதைகள் ரூ.8,91,810 மானிய விலையிலும், தட்டைபயறு விதைகள் 1,229 கிலோ ரூ.73,740 மானிய விலையிலும், 1,109 லிட்டா் உயிா் உரங்கள் ரூ.1,66,350 மானிய விலையிலும், 1,655 கிலோ சிறுதானிய நுண்ணூட்டங்கள் ரூ.89,370 மானிய விலையிலும் விவசாயிகளுக்கு விநியோகம் செய்யப்பட்டுள்ளன என்றாா்.

ஆய்வின்போது, கிணத்துக்கடவு வட்டார வளா்ச்சி அலுவலா்கள் மோகன் பாபு, ராஜேஷ்குமாா், வட்டாட்சியா் வாசுதேவன், வேளாண்மை அலுவலா் குருசாமி, உதவி விதை அலுவலா் உதயகுமாா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.