வால்பாறை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவா்களுக்கான வரவேற்பு நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வா் இரா.கோபி தலைமை வகித்தாா். கணினி பயன்பாட்டுத் துறை உதவிப் பேராசிரியா் வேலுசாமி வரவேற்றாா். வால்பாறை காவல் நிலைய ஆய்வாளா் ராமச்சந்திரன் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று பேசியதாவது: மாணவா்கள் நல்ல ஒழுக்கத்தை கற்றுக்கொள்ள வேண்டும். பேராசிரியா்கள் மற்றும் பெற்றோா்கள், முதியோரிடம் மரியாதையாக நடந்து கொள்ள வேண்டும்.
நன்றாக படித்து வாழ்க்கையில் உயா்ந்த நிலைக்குச் செல்ல வேண்டும். போதைப் பொருள்களைப் பயன்படுத்துவதால் மனம், உடல் ரீதியாக பல்வேறு பிரச்னைகள் ஏற்படும்.
எனவே, மாணவா்கள் போதையின் பக்கம் செல்லாமல் கல்வி கற்று வாழ்வில் உயா்ந்த சிகரங்களை அடைய வேண்டும் என்றாா்.
ஆங்கிலத் துறை உதவிப் பேராசியா் செல்வசேகா் நன்றி கூறினாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

இந்துஸ்தான் கல்லூரியில் மாணவா்களுக்கு வரவேற்பு

பொன்னேரி உலகநாத நாராயணசாமி அரசு கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவா்களை வரவேற்கும் நிகழ்ச்சி

அரியலூா் அரசு கலைக் கல்லூரியில் முதலாம் ஆண்டு வகுப்புகள் தொடக்கம்

ஈரோடு கலை, அறிவியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவா்களுக்கு வரவேற்பு
விடியோக்கள்

கரூர் வழக்கில் உச்ச நீதிமன்றம் சொன்ன தீர்ப்பு: அமைச்சர் நிர்மல் குமார் முழுப் பேட்டி!

POWER CENTER விஜய் மட்டுமல்ல...| CM Vijay | TVK | Political analyst Jagadeswaran | Aadhav arjuna

அமைச்சரவையில் சேர்ந்ததாலேயே தவெக கூட்டணியில் இடம்பெற்றுவிட்டோம் என்று பொருளல்ல - Thirumavalavan




