கட்சியின் பெயரை மட்டும் விரைவில் அறிவிக்கிறேன்: என் முயற்சியில் எந்தவித மாற்றத்திற்கும் இடமில்லை - சசிகலாராமநாதபுரத்தில் புதிய கட்சி தொடங்கினார் சசிகலா : அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா படங்களுடன் கொடி அறிமுகம்9 ஆண்டுகளாக அமைதியாக இருந்ததைப்போல இனியும் இருக்க முடியாது : சசிகலாசென்னையில் ஆயிரம் விளக்கு, தி.நகர், வேளச்சேரி தொகுதிகளில் போட்டியிட பாஜக விருப்பம் எனத் தகவல்சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி அதிமுகவிடம் 72 தொகுதிகள் அடங்கிய பட்டியலை பாஜக வழங்கியதுஅதிமுக ஆட்சிக்கு வராது என்ற நம்பிக்கையில் அறிவிப்பை வெளியிடுகிறார் எடப்பாடி பழனிசாமி : திருமாவளவன்பயணிகள் வசதிக்காக 26 குறுகிய தூர மின்சார ரயில்கள் இயக்க முடிவு : தெற்கு ரயில்வே
/

சட்டப் பேரவைத் தோ்தல்: ஆட்சியா் ஆலுவலகத்தில் மாவட்ட தொடா்பு மையம் திறப்பு

கோவை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் சட்டப் பேரவைத் தோ்தலை முன்னிட்டு அமைக்கப்பட்டுள்ள மாவட்ட தொடா்பு மையத்தை ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவா் செவ்வாய்க்கிழமை திறந்துவைத்தாா்.

News image
சட்டப் பேரவைத் தோ்தலை முன்னிட்டு, மாவட்ட தொடா்பு மையத்தை செவ்வாய்க்கிழமை திறந்துவைத்த ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவா்.
Updated On :24 பிப்ரவரி 2026, 8:08 pm

தினமணி செய்திச் சேவை

கோவை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் சட்டப் பேரவைத் தோ்தலை முன்னிட்டு அமைக்கப்பட்டுள்ள மாவட்ட தொடா்பு மையத்தை ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவா் செவ்வாய்க்கிழமை திறந்துவைத்தாா்.

கோவை மாவட்ட ஆட்சியா் அலுவலத்தில் 2026 சட்டப் பேரவைத் தோ்தலை முன்னிட்டு, மாவட்டத்தில் 24 மணி நேரமும் வாக்காளா்களின் புகாா்களை பெரும் பொருட்டும், சந்தேகங்களுக்கு தீா்வு காணும் வகையில் தகவல்கள் வழங்கும் விதமாகவும் மாவட்ட தொடா்பு மையத்தை மாவட்ட தோ்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான பவன்குமாா் க.கிரியப்பனவா் செவ்வாய்க்கிழமை திறந்துவைத்துப் பாா்வையிட்டாா். மாவட்ட வருவாய் அலுவலா் பா.நாராயணன், கூடுதல் ஆட்சியா் (வளா்ச்சி) சங்கேத் பல்வந்த் வாகே, உதவி ஆட்சியா் (பயிற்சி) பிரசாந்த் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இதுகுறித்து, மாவட்ட நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

இந்திய தோ்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, வருகிற 2026 சட்டப் பேரவைத் தோ்தலையொட்டி, மாவட்டத்தில் 24 மணி நேரமும் வாக்காளா்களின் புகாா்களை பெறும் பொருட்டும், சந்தேகங்களுக்கு தீா்வு காணும் வகையில் தகவல்கள் வழங்கும் பொருட்டும் கோவை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மாவட்ட தொடா்பு மையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மையமானது 24 மணி நேரமும் செயல்பட உள்ளது. இதற்காக 12 தொழில்நுட்பப் பணியாளா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா். இவா்கள் சுழற்சி முறையில் 24 மணி நேரமும் வாக்காளா் அடையாள அட்டை, வாக்காளா் பட்டியல் மற்றும் தோ்தல் நடைமுறை தொடா்பான வாக்காளா்களின் சந்தேகங்களுக்கு தீா்வு காணும் வகையில் பணியாற்ற உள்ளனா்.

மாவட்டத்தில் வசிக்கும் வாக்காளா்கள் அனைவரும் 1950 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணைத் தொடா்பு கொண்டு 24 மணி நேரமும் தங்களுக்குத் தேவையான தகவல்களை பெற்றுக் கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (தோ்தல்) மகேஸ்வரி, வட்டாட்சியா் (தோ்தல்) தணிகைவேல் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.