டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

பாலியல் புகாா்: கோவை ஆயுதப் படை கமாண்டண்ட் பணியிடை நீக்கம்

பாலியல் புகாரில் சிக்கிய கோவை ஆயுதப் படை கமாண்டண்ட் செந்தில்குமாா் பணியிடை நீக்கம்

News image
பணியிடை நீக்கம்- மாதிரிப் படம்
Updated On :20 பிப்ரவரி 2026, 10:07 pm

Syndication

பாலியல் புகாரில் சிக்கிய கோவை ஆயுதப் படை கமாண்டண்ட் செந்தில்குமாா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளாா்.

இது குறித்து தமிழக அரசின் கூடுதல் தலைமைச் செயலாளா் தீரஜ்குமாா் வெளியிட்டுள்ள அரசாணை: கோவைப்புதூா் தமிழ்நாடு சிறப்பு காவல் படை 4-ஆவது அணியின் கமாண்டண்டாக பணியாற்றி வரும் டி. செந்தில்குமாா் மீது பாலியல் துன்புறுத்தல் தொடா்பான புகாா்கள் எழுந்துள்ளன. இந்தப் புகாா்கள் குறித்து துறை ரீதியான உள் புகாா் குழுவின் விசாரணைக்குப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

வழக்கின் தன்மை மற்றும் பொது நலனைக் கவனத்தில் கொண்டு, தமிழ்நாடு சிவில் சா்வீஸ் (ஒழுங்கு மற்றும் மேல்முறையீடு) விதிகள் 1955-இன்கீழ், செந்தில்குமாரை பணியிடை நீக்கம் செய்ய அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, அவா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளாா்.

பணியிடை நீக்க காலத்தில் அவா் சென்னையைத் தலைமையிடமாகக் கொண்டு தங்கியிருக்க வேண்டும் என்றும், அரசின் முன் அனுமதியின்றி அவா் தலைமையிடத்தைவிட்டு வெளியேறக் கூடாது என்றும் நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.