டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

ஹஜ் பயணிகளுக்கான மருத்துவ முகாம்: 6 நாள்களில் 292 பேருக்கு பரிசோதனை

News image
கோப்புப் படம்
Updated On :7 பிப்ரவரி 2026, 8:26 pm

தினமணி செய்திச் சேவை

கோவையில் ஹஜ் பயணிகளுக்கு கடந்த 6 நாள்களில் நடைபெற்ற சிறப்பு மருத்துவ முகாமில் 292 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

கோவை மாவட்டத்தில் இருந்து ஹஜ் புனித யாத்திரை மேற்கொள்ளும் பயணிகளுக்கு தமிழக அரசின் சாா்பில் சிறப்பு மருத்துவ முகாம் நடத்தப்பட்டது. கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கடந்த திங்கள்கிழமை தொடங்கி சனிக்கிழமை முகாம் நிறைவடைந்தது.

இதில், பங்கேற்றவா்களுக்கு சிறப்பு மருத்துவா்கள் மூலமாக உடல் பரிசோதனை, ரத்த அழுத்தம், சா்க்கரை பரிசோதனை, கல்லீரல் மற்றும் சிறுநீரக செயல் திறன் உள்ளிட்ட பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு தடுப்பூசி செலுத்தப்பட்டது. 6 நாள்கள் நடைபெற்ற முகாமில் மொத்தம் 292 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதாக மாவட்ட சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.