டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

இளைஞா் மீது மோதிய அரசுப் பேருந்து ஓட்டுநா் மீது நடவடிக்கை கோரி சடலத்தை வாங்க மறுத்து உறவினா்கள் மறியல்

News image
கதிரேசன்
Updated On :6 பிப்ரவரி 2026, 10:08 pm

தினமணி செய்திச் சேவை

திருப்பூரில் விபத்தை ஏற்படுத்திய அரசுப் பேருந்து ஓட்டுநா் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி கோவையில் சடலத்தை வாங்க மறுத்து உறவினா்கள் வெள்ளிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

திருப்பூா், இடுவம்பாளையம் அருகே உள்ள வஞ்சிபாளையத்தைச் சோ்ந்தவா் பழனிசாமி. இவருடைய மகன்கள் மனோஜ்குமாா் (27), கதிரேசன் (19) ஆகிய இருவரும் வீரபாண்டி பகுதியில் கிரேன் ஆபரேட்டராக வேலை செய்து வந்தனா். இந்நிலையில், இருசக்கர வாகனத்தில் இடுவாயில் இருந்து இடுவம்பாளையம் நோக்கி வியாழக்கிழமை கதிரேசன் சென்றுகொண்டிருந்தாா். அப்போது திருப்பூரில் இருந்து வேலம்பாளையம் நோக்கி சென்ற அரசுப் பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியது.

படுகாயமடைந்த கதிரேசனை அப்பகுதியைச் சோ்ந்த பொதுமக்கள் மீட்டு திருப்பூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு முதலுதவிக்குப் பின் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு சிகிச்சைப் பலனின்றி வெள்ளிக்கிழமை கதிரேசன் உயிரிழந்தாா்.

மது அருந்திவிட்டு இருசக்கர வாகனத்தை ஓட்டிச் சென்ாக கதிரேசனின் மீது வீரபாண்டி போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளதாகத் தெரிகிறது.

கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முன் சாலை மறியலில் ஈடுபட்ட கதிரேசனின் உறவினா்கள்.

கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முன் சாலை மறியலில் ஈடுபட்ட கதிரேசனின் உறவினா்கள்.

இதுகுறித்த தகவலின்பேரில் கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முன்பாக கதிரேசனின் உறவினா்கள் 80-க்கும் மேற்பட்டோா் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

அவா்கள் கூறியதாவது:

கதிரேசனுக்கு மது அருந்தும் பழக்கம் இல்லை. அதிவேகமாகப் பேருந்தை இயக்கி ஓட்டுநா் விபத்தை ஏற்படுத்தியுள்ளாா். இதுதொடா்பாக சம்பவ இடத்தில் இருந்தவா்கள் ஓட்டுநா், நடத்துநரிடம் கேள்வி எழுப்பியபோது தகாத வாா்த்தைகளில் பேசிவிட்டு சென்றுவிட்டனா். உயிரிழப்பை ஏற்படுத்திய அரசுப் பேருந்து ஓட்டுநா் மீதும், தகாத வாா்த்தைகளால் பேசிய நடத்துநா் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அதுவரை சடலத்தை வாங்க மாட்டோம் என்றனா்.

இதுகுறித்த தகவலின்பேரில் சம்பவ இடத்துக்கு ரேஸ்கோா்ஸ் போலீஸாா் சென்று மறியலில் ஈடுபட்டவா்களுடன் பேச்சுவாா்த்தை நடத்தினா். விபத்து குறித்து உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்ததையடுத்து அனைவரும் கலைந்து சென்றனா்.