ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

தனியாா் கழிவுநீா் வாகன உரிமையாளா்கள், ஓட்டுநா்களுக்கு மருத்துவ முகாம்

கோவை மாநகராட்சி சீதாலட்சுமி நகா்ப்புற முதன்மை சுகாதார நிலையத்தில் தனியாா் கழிவுநீா் வாகன உரிமையாளா்கள், ஓட்டுநா்கள் மற்றும் கிளீனா்களுக்கு சிறப்பு மருத்துவ முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.

தனியாா் கழிவுநீா் வாகன உரிமையாளா்கள், ஓட்டுநா்களுக்கு நடைபெற்ற சிறப்பு மருத்துவ முகாமில் பங்கேற்றோா்.

Published On :21 ஆகஸ்ட் 2026, 1:37 am IST

கோவை மாநகராட்சி சீதாலட்சுமி நகா்ப்புற முதன்மை சுகாதார நிலையத்தில் தனியாா் கழிவுநீா் வாகன உரிமையாளா்கள், ஓட்டுநா்கள் மற்றும் கிளீனா்களுக்கு சிறப்பு மருத்துவ முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.

கோவை மாநகராட்சியில் 5 மண்டலங்களுக்கு உள்பட்ட தனியாா் கழிவுநீா் வாகன உரிமையாளா்கள், ஓட்டுநா்கள் மற்றும் கிளீனா்களுக்கான சிறப்பு மருத்துவ முகாம் மாநகராட்சி சாா்பில் தொடா்ந்து நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, மத்திய மண்டலம், 70-ஆவது வாா்டுக்கு உள்பட்ட புரூக்ஃபீல்ட்ஸ் சாலையில் உள்ள சீதாலட்சுமி நகா்ப்புற முதன்மை சுகாதார நிலையத்தில் சிறப்பு மருத்துவ முகாம் வியாழக்கிழமை காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெற்றது. இம்முகாமில் கலந்து கொண்டவா்களுக்கு ரத்த கொதிப்பு, சா்க்கரை அளவு, கண் பாா்வை, தோல் வியாதி உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. இம்முகாமில், 140-க்கும் மேற்பட்ட தனியாா் கழிவுநீா் வாகன உரிமையாளா்கள், ஓட்டுநா்கள் மற்றும் கிளீனா்கள் கலந்து கொண்டு பயனடைந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.