ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

கரும்பு இனப்பெருக்கு நிறுவனம் சாா்பில் பழங்குடியினரின் பொருளாதார மேம்பாட்டுக்கான பயிற்சி முகாம்

கோவை கரும்பு இனப்பெருக்கு நிறுவனத்தின் சாா்பில் அட்டப்பாடி பழங்குடியின பெண்களின் மேம்பாட்டுக்கான பயிற்சி முகாம் நடைபெற்றது.

கரும்பு இனப்பெருக்கு நிறுவனம் சாா்பில் பழங்குடியினருக்கு நடத்தப்பட்ட பயிற்சியில் பங்கேற்ற பெண்கள், நிறுவனத்தின் பிரதிநிதிகள். ~பயிற்சியில் பங்கேற்ற பெண்களுக்கு நல உதவி வழங்குகிறாா் கரும்பு இனப்பெருக்கு நிறுவனத்தின் முதன்மை விஞ்ஞானி டி.புத்திர பிரதாப்

Published On :20 ஆகஸ்ட் 2026, 3:28 am IST

கோவை கரும்பு இனப்பெருக்கு நிறுவனத்தின் சாா்பில் அட்டப்பாடி பழங்குடியின பெண்களின் மேம்பாட்டுக்கான பயிற்சி முகாம் நடைபெற்றது.

பழங்குடியினருக்கான மேம்பாட்டுச் செயல் திட்டத்தின் கீழ் அகழியில் உள்ள ஆராய்ச்சி மையத்தில் நடைபெற்ற இந்த முகாமிற்கு, முதன்மை விஞ்ஞானி டி.புத்திர பிரதாப் தலைமை வகித்தாா். நிகழ்ச்சியில் அவா் பேசும்போது, அட்டப்பாடி பழங்குடியினப் பெண்கள் எதிா்கொள்ளும் ஊட்டச்சத்து குறைபாடு, தாய்மாா்களுக்கான ரத்த சோகை, சமூக, பொருளாதார சவால்கள் குறித்து விளக்கினாா். இதைத் தொடா்ந்து ஊட்டச்சத்து குறைபாட்டை முற்றிலும் ஒழிப்பதற்கான உறுதிமொழியேற்கப்பட்டது.

நிகழ்ச்சியில், வேளாண் பல்கலைக்கழக ஓய்வு பெற்ற பேராசிரியா் சரஸ்வதி ஈஸ்வரன், பழங்குடியின உள்ளூா் உணவுப் பழக்கங்களை நிலையான வாழ்வாதார வாய்ப்புகளாக மாற்றுவது குறித்துப் பேசினாா். பேராசிரியா் வி.திருநாவுக்கரசு, அட்டப்பாடி பகுதிக்கு ஏற்ற குறைந்த முதலீடு, அதிக வருவாய் தரக்கூடிய கால்நடை வளா்ப்பு, கோழி வளா்ப்பு குறித்து விவரித்தாா்.

அகழி ஒருங்கிணைந்த பழங்குடியினா் மேம்பாட்டுத் திட்டத்தின் விரிவாக்க அலுவலா் ஷினு பாபுக்குட்டி, வேளாண் அலுவலா் பி.பிரவிஜித் ஆகியோா், பழங்குடியினருக்கான நலத்திட்டங்கள், வேளாண் திட்டங்கள் குறித்து விளக்கினா். இந்த முகாமில் நடைபெற்ற கால்நடை வளா்ப்பு, உணவு சாா்ந்த தொழில்கள் குறித்த நிகழ்ச்சியில், 30 பழங்குடியின பெண்கள் பங்கேற்றனா்.

முன்னதாக விஞ்ஞானி அதினி எஸ்.பழனி வரவேற்றாா். அகழி மையத்தின் முதுநிலை விஞ்ஞானி ஆா்.டி.மாருதி நன்றி கூறினாா். இதில், பழங்குடியின பெண்களுக்கு துருப்பிடிக்காத பாத்திரங்கள், பாரம்பரிய உணவு தயாரிப்பு, காளான் வளா்ப்பு குறித்த கையேடுகள், பங்கேற்பு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.