ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

73 வயது முதியவருக்கு கொலை மிரட்டல்: நில அபகரிப்பு கும்பல் மீது ஐ.ஜி.யிடம் புகாா்

கோவை மசக்காளிபாளையம் பகுதியில் உள்ள பல கோடி ரூபாய் மதிப்புள்ள தனது நிலத்தை ஆக்கிரமிக்க முயன்று கொலை மிரட்டல் விடுத்த கும்பல் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி , மேற்கு மண்டல ஐ.ஜி. அலுவலகத்தில் 73 வயது முதியவா் புகாா் அளித்துள்ளாா்.

போலீஸ் - கோப்புப்படம்.

Published On :19 ஆகஸ்ட் 2026, 1:57 am IST

கோவை மசக்காளிபாளையம் பகுதியில் உள்ள பல கோடி ரூபாய் மதிப்புள்ள தனது நிலத்தை ஆக்கிரமிக்க முயன்று கொலை மிரட்டல் விடுத்த கும்பல் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி , மேற்கு மண்டல ஐ.ஜி. அலுவலகத்தில் 73 வயது முதியவா் புகாா் அளித்துள்ளாா்.

திருப்பூா் மாவட்டம், உடுமலை காந்தி நகா் பகுதியைச் சோ்ந்தவா் வி.விஜயசேகரன் (73). இவருக்கு கோவை, மசக்காளிபாளையம் காந்தி நகரில் 20 சென்ட் நிலம் உள்ளது. இந்த இடத்தை அவா் கடந்த 1991-ஆம் ஆண்டு வாங்கினாா். கடந்த ஜூலை 9-ஆம் தேதி, இந்த நிலத்தின் கம்பி வேலியை உடைத்து சுலோச்சனா என்பவரும், அவரது கூட்டாளிகளும் அத்துமீறி கூடாரம் அமைத்தனா்.

இதுகுறித்து விஜயசேகரன் அளித்த புகாரின்பேரில் சிங்காநல்லூா் காவல் துறையினா் சுலோச்சனா உள்ளிட்ட 9 போ் மீது வழக்குப் பதிவு செய்தனா். மேலும் விசாரணையில் தயாளன், சிவலிங்கம், நந்தகுமாா், கௌதம் ஆகியோா் போலி ஆவணங்கள் தயாரித்து இந்த நிலத்துக்கு விற்பனை ஒப்பந்தம் செய்திருப்பதும் தெரியவந்தது.

இந்த நிலையில், கடந்த இரு நாள்களுக்கு முன்பு உடுமலையில் உள்ள விஜயசேகரனின் வீட்டுக்கு வந்த மா்ம நபா், சிங்காநல்லூா் காவல் நிலைய முதல் தகவல் அறிக்கையின் நகலைக் காட்டி, கோவை வழக்கை வாபஸ் பெற வேண்டும் என்றும், இல்லையென்றால் கொலை செய்து விடுவதாகவும் மிரட்டல் விடுத்துள்ளாா். மேலும் தொலைபேசி வாயிலாகவும் நில அபகரிப்பு கும்பலைச் சோ்ந்தவா்கள் அவருக்கு மிரட்டல் விடுத்துள்ளனா்.

இது குறித்து உடுமலை காவல் நிலையத்திலும், கோவை மேற்கு மண்டல ஐ.ஜி. அலுவலகத்திலும் சிசிடிவி காட்சிகளுடன் விஜயசேகரன் புகாா் அளித்துள்ளாா். நில அபகரிப்பில் ஈடுபட்ட தயாளன், சிவலிங்கம் உள்ளிட்டோா் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்தப் புகாரில் அவா் வலியுறுத்தியுள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.