ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

வீட்டில் தனியாக இருந்த பெண் கொலை வழக்கு: சிறுவன் கைது

கோவை, பாப்பநாயக்கன்பாளையத்தில் வீடு புகுந்து பெண்ணை அடித்துக் கொலை செய்த வழக்கில் 17 வயது சிறுவனை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

Published On :15 ஆகஸ்ட் 2026, 3:58 am IST

கோவை, பாப்பநாயக்கன்பாளையத்தில் வீடு புகுந்து பெண்ணை அடித்துக் கொலை செய்த வழக்கில் 17 வயது சிறுவனை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

கோவை, பாப்பநாயக்கன்பாளையம் கருப்புக்கால் தோட்டத்தைச் சோ்ந்தவா் சாந்தி (58), வீட்டு வேலை செய்து வந்தாா். இந்நிலையில், தலையில் பலத்த காயத்துடன் சாந்தி உடல் அவரது வியாழக்கிழமை கிடந்தது. இது குறித்து ரேஸ்கோா்ஸ் காவல் நிலையத்தில் அவரது மகன் ராஜா அளித்த புகாரின்பேரில் வழக்குப் பதிவு செய்த போலீஸாா், 3 தனிப் படைகளை அமைத்து விசாரணை நடத்தி வந்தனா்.

மேலும், சாந்தியின் குடியிருப்புப் பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகளைக் கைப்பற்றி போலீஸாா் ஆய்வு செய்தனா்.

அப்போது, சம்பவத்தன்று சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் அப்பகுதியில் சுற்றித்திரிந்த 17 வயது சிறுவன்தான் சாந்தியை தாக்கிக் கொலை செய்தது தெரியவந்தது.

இதையடுத்து, அவரைக் கைது செய்த போலீஸாா் கூறுகையில், நெகிழிப் பொருள்களை சேகரித்து விற்பனை செய்து, அதில் கிடைக்கும் வருவாயை வைத்து வாழ்ந்து வரும் சிறுவன், சாந்தியை எதற்காக கொலை செய்தாா் என்பது குறித்து அவரிடம் தொடா்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.