ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

‘மாநகராட்சியில் கடந்த ஆண்டைக் காட்டிலும் சொத்துவரி ரூ.38.43 கோடி கூடுதல் வசூல்’

கோவை மாநகராட்சியில் இரண்டாம் அரையாண்டு சொத்துவரி ரூ.199.98 கோடி வசூலிக்கப்பட்ட நிலையில் கடந்த ஆண்டைவிட ரூ.38.43 கோடி சொத்து வரி கூடுதலாக வசூலிக்கப்பட்டுள்ளது.

கோப்புப் படம்

Published On :12 ஆகஸ்ட் 2026, 2:12 am IST

கோவை மாநகராட்சியில் இரண்டாம் அரையாண்டு சொத்துவரி ரூ.199.98 கோடி வசூலிக்கப்பட்ட நிலையில் கடந்த ஆண்டைவிட ரூ.38.43 கோடி சொத்து வரி கூடுதலாக வசூலிக்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக மாநகராட்சி ஆணையா் கட்டா ரவி தேஜா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

கோவை மாநகராட்சிக்கு 2026-2027 நடப்பு நிதியாண்டின் இரண்டாம் அரையாண்டு வரையிலான காலத்துக்கு செலுத்த வேண்டிய சொத்து வரி, காலியிட வரி, தொழில் வரி, குடிநீா் கட்டணம் மற்றும் பாதாள சாக்கடை கட்டணம், மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய கடை வாடகை முதலிய நிலுவைகளை வசூல் செய்யும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

இதில் மாநகராட்சிக்கு பிரதான வருவாய் இனமான சொத்து வரியில் தற்போது வரை 2026-27-ஆம் நிதியாண்டின் நிலுவை வரி 10.38 சதவீதம், நடப்பு வரி 33.74 சதவீதம் வசூலிக்கப்பட்டுள்ளது. இதே நாளில் கடந்த ஆண்டு சொத்து வரி மொத்த வசூல் ரூ.161.55 கோடி ஆகும். தற்போது ரூ.199.98 கோடி வசூல் செய்யப்பட்டுள்ளது. நடப்பு நிதி ஆண்டில் ரூ.38.43 கோடி கூடுதலாக வசூலிக்கப்பட்டுள்ளது.

மேலும், நடப்பு 2026-27-ஆம் நிதி ஆண்டு முடிவுக்குள் 100 சதவீதம் வரி வசூல் இலக்கை எட்டும் வகையில் சிறப்பு வரிவசூல் முகாம்கள், அரசு விடுமுறை நாள்கள் நீங்கலாக அனைத்து வேலை நாள்களிலும் வரி வசூல் முகாம்கள் செயல்படுகின்றன.

எனவே, வரியினங்களை உடனடியாக செலுத்தி மாநகராட்சி வளா்ச்சி பணிக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.