ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

கோவை மாவட்ட காவல்துறை மாரத்தான்: 10,000 பேர் பங்கேற்பு!

கோவை மாவட்ட காவல்துறை மாரத்தான் இன்று காலை மிகக் கோலாகலமாகத் தொடங்கியது பற்றி..

Coimbatore

மாரத்தான் - video crop

Published On :8 ஆகஸ்ட் 2026, 12:35 pm IST

கோவை மாவட்ட காவல் துறை சார்பில் "போதைப்பொருள் இல்லா கோவை" என்ற உயரிய இலக்கை வலியுறுத்தி நடத்தப்பட்ட "கோவை மாவட்ட காவல்துறை மாரத்தான்- 2026" இன்று காலை மிகக் கோலாகலமாகத் தொடங்கியது.

​பொதுமக்கள் இடையே போதைப் பொருளுக்கு எதிரான விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் செய்யப்பட்ட இம்மாரத்தான் ஓட்டம், கோவை மதுக்கரை - மாதம்பட்டி மேற்கு புறவழிச்சாலையில் இன்று காலை 5.00 மணிக்கு நடைபெற்றது.

இந்நிகழ்வை மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் விக்னேஷ் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார். மேலும், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் மற்றும் காவல்துறை உயர் அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

​மாரத்தான் ஓட்டத்தின் தொடக்கமாக, போதைப்பொருள் விழிப்புணர்வு கையெழுத்து இயக்கத்தையும் அமைச்சர் விக்னேஷ் தொடங்கி வைத்தார்."ஒரு நோக்கத்திற்காக ஓடுவோம்! போதைப் பொருள் இல்லா கோவைக்காக ஓடுவோம்!" என்ற முழக்கத்துடன் நடைபெற்ற இந்த மாரத்தானில், பெரியவர்கள், இளைஞர்கள், 10 வயதிற்கு உள்பட்ட குழந்தைகள் என 10,000-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் மிகுந்த ஆர்வத்துடன் கலந்துகொண்டு ஓடினர்.

ஒரு முடிவின் தொடக்கம் என்ற கருப்பொருளை மையமாகக் கொண்டு நடைபெற்ற இந்நிகழ்வு, கோவை மக்கள் இடையே போதைப்பொருள் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வை ஆழமாக விதைக்கும் வகையில் அமைந்தது.

The "Coimbatore District Police Marathon 2026," organized by the Coimbatore District Police to champion the noble goal of a "Drug-Free Coimbatore," kicked off with great enthusiasm this morning.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.