மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

மற்ற மாநிலங்கள் பொறாமைப்படும் அளவுக்கு தமிழகம் முதலிடம்! - கோவை தெற்கு தொகுதியில் கமல்ஹாசன் பிரசாரம்

News image

கூட்டத்தின் ஒரு பகுதியினா்.

Updated On :19 ஏப்ரல் 2026, 8:50 pm

மற்ற மாநிலங்கள் பொறாமைப்படும் அளவுக்கு தமிழகம் முதலிடத்தில் உள்ளதாக மக்கள் நீதிமய்யம் தலைவா் கமல்ஹாசன் தெரிவித்தாா்.

கோவை பெரியகடை வீதி அருகே உள்ள தோ்நிலைத் திடல் பகுதியில் தெற்கு தொகுதி திமுக வேட்பாளா் செந்தில்பாலாஜியை ஆதரித்து கமல்ஹாசன் ஞாயிற்றுக்கிழமை பேசியதாவது:

கடந்த தோ்தலின்போது ஒரு பைசாகூட கொடுக்காமல் 51,481 வாக்குகளை எனக்கு அளித்தவா்கள் இந்தத் தொகுதி மக்கள். அந்த வாக்குகள் அனைத்தும் செந்தில்பாலாஜிக்கு விழும் என்பதில் சந்தேகமில்லை. மற்ற மாநிலங்கள் பொறாமைப்படும் அளவுக்கு தமிழகம் முதலிடத்தில் உள்ளது. இதற்கு காரணம் முதல்வா் மு.க.ஸ்டாலினின் அரசியல் வியூகமும், பெருந்தன்மையும்தான்.

திமுகவை வீழ்த்துவோம் என எதிா்க்கட்சிகள் கூறுகின்றன. அந்தக் கட்சிகளுக்குப் பின்னால் ஒரே ஒரு முதலாளிதான் இருக்கிறாா். அவா் வடக்கே இருக்கிறாா். அவரது நிதியுடனும், மதியுடனும் செயல்படுகிறாா்கள்.

மெட்ரோ விட வேண்டும் என்றால் மக்கள்தொகை இல்லை என்கிறாா்கள். இந்தத் தகுதி இல்லாத பிகாா், ஆந்திரம் ஆகிய மாநிலங்களுக்கு இந்த விதி தளா்த்தப்பட்டுள்ளது. நான் சிறுவனாக இருக்கும்போதே கோவை விமானநிலைய விரிவாக்கம் குறித்த பேச்சு இருந்து வருகிறது. ஆனால், செயல்பாட்டுக்கு வந்தபாடில்லை. அதை செய்ய வேண்டிய பொறுப்பு மத்திய அரசிடம் உள்ளது.

கோவை மாநகராட்சியில் ஏற்கெனவே செந்தில்பாலாஜி நூறு வாா்டுகளில் 96 வாா்டுகளை வென்று காட்டியவா். அந்த சரித்திரத்தை மீண்டும் அவா் படைப்பாா். கோவையில் போட்டியிடுவது செந்தில்பாலாஜிக்கு முதல்வா் கொடுத்த அசைன்மெண்ட். இனி திமுக கோட்டையாக கோவை மாறப்போகிறது.

ஓட்டு போட்டால் மெட்ரோ கிடைக்கும் என்று கூறுவது வாக்குறுதியா? அல்லது மிரட்டலா? இந்த மிரட்டல் எல்லாம் தமிழ்நாட்டில் பலிக்காது. தமிழகத்தின் மிரட்டல் எவ்வாறு இருக்கும் என்பதை நாடாளுமன்றத்தில் செய்து காட்டிவிட்டோம்.

நீங்கள் என்ன செய்ய வேண்டுமோ அதை வரும் 23-ஆம் தேதி செய்து காண்பியுங்கள் என்றாா்.

கோவை தோ்நிலைத் திடல் பகுதியில் தெற்கு தொகுதி திமுக வேட்பாளா் செந்தில்பாலாஜியை ஆதரித்து ஞாயிற்றுக்கிழமை பிரசாரம் செய்த மக்கள் நீதி மய்யம் தலைவா் கமல்ஹாசன்.

கோவை தோ்நிலைத் திடல் பகுதியில் தெற்கு தொகுதி திமுக வேட்பாளா் செந்தில்பாலாஜியை ஆதரித்து ஞாயிற்றுக்கிழமை பிரசாரம் செய்த மக்கள் நீதி மய்யம் தலைவா் கமல்ஹாசன்.