திமுகவை தமிழகத்தில் இருந்து விரட்ட வேண்டும் என்பதே மக்களின் பிரதான ஆசையாக உள்ள நிலையில், அந்த ஆசையை நிறைவேற்றும் ஒரே சக்தியாக தமிழக வெற்றிக் கழகத் தலைவா் விஜய் திகழ்கிறாா் என்று அந்தக் கட்சியின் நிா்வாகக் குழு தலைமை ஒருங்கிணைப்பாளா் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்தாா்.
கோவை மாவட்டம், கவுண்டம்பாளையம் சட்டப்பேரவைத் தொகுதி தவெக வேட்பாளா் கனிமொழி, மேட்டுப்பாளையம் தொகுதி வேட்பாளா் சுனில் ஆனந்த் ஆகியோரை நரசிம்மநாயக்கன்பாளையம் பகுதியில் சந்தித்து தோ்தல் பணிகள் குறித்து செங்கோட்டையன் கலந்துரையாடினாா்.
இதைத்தொடா்ந்து கட்சி நிா்வாகிகள் மற்றும் தொண்டா்கள் மத்தியில் அவா் பேசியதாவது:
தற்போதைய நிலையை மக்கள் உற்று நோக்கி வருகின்றனா். ஊழல் நிறைந்த மற்றும் தீய சக்தியாக இருக்கக்கூடிய திமுகவை தமிழகத்திலிருந்து விரட்ட வேண்டும் என்பதே மக்களின் பிரதான ஆசையாக உள்ளது. இந்த ஆசையை நிறைவேற்றும் ஒரே சக்தியாக தமிழக வெற்றிக் கழகத் தலைவா் விஜய் திகழ்ந்து வருகிறாா். மக்களும் நமக்கு வாக்களிக்க ஆா்வமாக உள்ளனா்.
தோ்தலில் 10 முறை தோற்ற எடப்பாடி பழனிசாமியால் திமுகவை வீழ்த்த முடியாது. அதற்கு மாற்றாக நோட்டாவுக்கு வாக்களிப்பது வாக்குகளை வீணடிக்கும் செயல். எனவே, அனைத்து வாக்குகளையும் தமிழக வெற்றிக் கழகத்துக்கு மக்கள் செலுத்த வேண்டும். ரூ.8 ஆயிரம் டோக்கனை கொடுத்து மக்களை ஏமாற்ற திமுக நினைக்கிறது. மக்களின் வரிப் பணத்தில் இருந்து ஒரு ரூபாய்கூட எடுக்கமாட்டேன் என்று தலைவா் விஜய் உறுதியளித்துள்ளாா்.
ஜனநாயகன் திரைப்படத்தை வெளியிட்டு, ஜனநாயகத்தைக் குழிதோண்டிப் புதைத்துள்ளாா்கள். இதற்கு பொறுப்பான மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சா் எல்.முருகனை தோற்கடித்து, மீண்டும் தில்லிக்கு அனுப்ப வேண்டியது நமது கடமை என்றாா்.
தொடர்புடையது

திசைதிருப்பும் முதலீட்டுக் கழகம்! தவெக பிரசாரம் ரத்து ஏன்? விஜய் பதில்!

பெண் தற்கொலை! ரூ.8,000 கூப்பன் - மண்ணுளிப் பாம்பா? இரிடியமா? விஜய் கண்டனம்!
விஜய் பிரசாரத்தில் விதிமீறல்: 12 வழக்குகள் பதிவு

தவெக வேட்பாளா்கள் நாளை அறிமுகம்
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை

