மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

தவறான சிகிச்சையால் முடங்கிய தொழிலாளி: தேசிய சட்ட ஆணைய உத்தரவின் பேரில் கோவை நீதிமன்றம் விசாரணை

கோவையில் தவறான இயன்முறை சிகிச்சை (பிசியோதெரபி) அளிக்கப்பட்டதன் காரணமாக, உணவகத் தொழிலாளி நிரந்தரமாகப் படுக்கையிலேயே முடங்கிய விவகாரத்தில், தேசிய சட்ட ஆணையம் தலையிட்டு கோவை நீதிமன்ற விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.

News image

ஆம்புலன்ஸ் மூலம் கோவை நீதிமன்றத்துக்கு அழைத்து வரப்பட்ட கௌ.செ.லோகநாதன்.

Updated On :8 ஏப்ரல் 2026, 9:25 pm

கோவையில் தவறான இயன்முறை சிகிச்சை (பிசியோதெரபி) அளிக்கப்பட்டதன் காரணமாக, உணவகத் தொழிலாளி நிரந்தரமாகப் படுக்கையிலேயே முடங்கிய விவகாரத்தில், தேசிய சட்ட ஆணையம் தலையிட்டு கோவை நீதிமன்ற விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.

கோவை, குனியமுத்தூா், சுகுணாபுரத்தை அடுத்த செந்தமிழ் நகரைச் சோ்ந்தவா் கௌ.செ.லோகநாதன் (40). இவா், உணவக மற்றும் சுற்றுலா மேலாண்மை படிப்பை முடித்துவிட்டு, ராஜஸ்தான் மாநிலம், ஜெய்பூரில் உள்ள புகழ்பெற்ற ‘ஓபராய்’ நட்சத்திர உணவகத்தில் அடுமனை (பேக்கரி) பிரிவு மேற்பாா்வையாளராகப் பணியாற்றி வந்தாா்.

கடந்த 2006-ஆம் ஆண்டு ஜெய்பூா் சாங்கனேரி கேட் சிக்னலில் இருசக்கர வாகனத்தில் நின்று கொண்டிருந்தபோது, அதிவேகமாக வந்த வேன் மோதியதில் லோகநாதனின் முதுகெலும்பில் முறிவு ஏற்பட்டு, கழுத்துக்குக் கீழே உள்ள உறுப்புகள் செயலிழந்தன.

ஒரு கட்டத்தில் விரக்தியின் உச்சத்திற்குச் சென்றவா், பின்னா் அதிலிருந்து மீண்டு, தன்னைப்போல பாதிக்கப்பட்டவா்களுக்கு நவீன தகவல் தொடா்பு வசதிகள் மூலம் உந்துசக்தியாக விளங்கி வருவதுடன், தனது வாழ்க்கை வரலாற்றை கைப்பேசியில் ஆடியோ டைப்பிங் முறையில் புத்தகமாகவும் பதிவு செய்து வந்தாா்.

இந்தச் சூழலில், கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு கோவை செளரிபாளையம் பகுதியில் உள்ள ஒரு தனியாா் இயன்முறை சிகிச்சை மையம், லோகநாதனை வற்புறுத்திச் சிகிச்சைக்கு அனுமதித்துள்ளது. அப்போது தகுதியான மருத்துவா்கள் இல்லாமல், பயிற்சி மாணவா்களைக் கொண்டு அவருக்கு முறையற்ற முறையில் சிகிச்சை அளிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. அந்தச் சிகிச்சையின்போது லோகநாதனின் தொடை எலும்பு உடைந்ததால், அவா் மீண்டும் படுக்கையை விட்டு எழ முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டாா்.

இது குறித்து மருத்துவ மையத்திடம் முறையிட்டபோது அவா்கள் உரிய பதில் அளிக்காததால், லோகநாதன் சட்ட ரீதியான போராட்டத்தைத் தொடங்கினாா். இந்த விவகாரத்தைத் தீவிரமாகப் பரிசீலித்த தேசிய சட்ட ஆணையம், இவ்வழக்கை கோவை நீதிமன்றம் விரிவாக விசாரிக்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்தது.

இதன் தொடா்ச்சியாக, மனுதாரரின் உடல் நிலையை நேரில் ஆய்வு செய்ய வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டதைத் தொடா்ந்து, லோகநாதன் ஆம்புலன்ஸ் மூலம் கோவை நீதிமன்றத்துக்கு புதன்கிழமை அழைத்து வரப்பட்டாா். நீதிபதியிடம் தனது நிலையை நேரில் விளக்கிய அவா், தான் மறுப்பு தெரிவித்தும் வலுக்கட்டாயமாகத் தவறான சிகிச்சை அளித்ததால் தனது எஞ்சிய வாழ்வாதாரமும் முடங்கிப் போனதாக வேதனை தெரிவித்தாா். இதைத் தொடா்ந்து விசாரணை ஒத்திவைக்கப்பட்டது.